இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

குமாரசுவாமியம் முன்னுரையும் வரலாறும்

குமாரசுவாமியம் முன்னுரையும் வரலாறும்
குமாரசுவாமியம் என்பது ஒரு மிகச்சிறந்த சோதிடநூல்களுள் ஒன்று. தமிழ் மொழியில் இயற்றப்பட்ட சோதிட நூல் ஆகும். இந்நாலை இயற்றியவர்‌ பாண்டி நாட்டில்‌ வீரவநல்லூரில்‌ வணிகர்‌ மரபைச்‌ சார்ந்தவர்‌ மாறியாடும்‌ பெருமாள்‌ அவருடைய அரும்பெரும்‌ புதல்வர்‌ ஸ்ரீகுமாரசுவாமி என்பவர்‌ எனக் கூறப்படுகிறது, இவர்‌ செந்திலாண்டவன்‌ திருவருள்‌ பேற்றைப்‌ பெற்றவர்‌ எனவும்‌, முருகன் அருளால் சோதிடக்கலையை உபதேசிக்கப்‌ பெற்று இந்நூலை இயற்றியதாகக் கூறப்படுகிறது.

சோதிடக்‌ கலையைக்‌ கற்றுணர்ந்து தெளிந்து இந்நூலை இயற்றி பின்னர் செந்திலாண்டவர் சன்னதியில்‌ தமிழ் கடவுள் முருகன் ஆசியோடு உலகு மக்கள் சிறப்புற்று விளங்க அரங்கேற்றம்‌ செய்தார்‌.

இந்நூல்‌ பல சோதிட நூல்கள்‌ கூறும்‌ செய்திகளையும்‌, பலன்களையும்‌ தொகுத்தும்‌ வகுத்தும்‌ திரட்டியும்‌ எழுதிய ஒன்று. நான்கு காண்டங்கள்‌ அடங்கியது அவை, (1) மூல காண்டம்‌, (2) சாதக காண்டம்‌, (3) முகூர்த்த காண்டம்‌, (4) சிந்தனா காண்டம்‌ ஆகியவை யாகும்‌.

காண்டங்கள்‌ பல படலங்களாகப்‌ பிரிக்கப்பட்டு உள்ளன. அவை முறையே மூலகாண்டம்‌ 14 படலங்களையும்‌, சாதக காண்டம்‌ 23 படலங்களையும்‌,  முகூர்த்த காண்டம்‌ 6 படலங்களையும்‌, சிந்தனா காண்டம்‌ 11 படலங்களையும்‌ கொண்டு உள்ளது.

சோதிடத்தில் மிகவும் முக்கியமான ஒன்றான நட்சத்திர சாரம் பற்றிய அரியத் தகவல்களை இந்நூல் மூலம் அறியப்பெறலாம். மேலும், பஞ்சாங்கம் சார்ந்த கணக்கீடுகள் பற்றி தகவல்களை எடுத்துரைக்கிறது.

இந்நூல் வெளியீட்டிற்கு தொண்டாற்றிய அனைவருக்கும் இந்நூலை கற்றறியும் சோதிடருக்கும் என்றும் முருகன் நல்லருள் உண்டு @{hi-IN}ஓம் சரவணபவ{hi-IN}

Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக