பன்னிரண்டு இராசிகள்:
1.மேஷம்,
2.ரிஷபம்,
3.மிதுனம்,
4.கடகம்,
5.சிம்மம்,
6.கன்னி,
7.துலாம்,
8.விருச்சிகம்,
9.தனுசு,
10.மகரம்,
11.கும்பம்,
12.மீனம்.
ஒவ்வொரு இராசியில் 3 நட்சத்திரங்கள் வீதம் 9 நட்சத்திர பாதங்கள் உள்ளது. ஒவ்வொரு இராசியும் 30 பாகை வீதம் மொத்தம் 12 இராசிகளாக 360 பாகை உள்ளது.
1.மேஷம்:
அஸ்வனி நட்சத்திரத்தின் 4 பாதங்கள், பரணி நட்சத்திரத்தின் 4 பாதங்களும், கார்த்திகை 1 பாதமும் அடங்கிய இராசி மேஷம் ஆகும். இந்த இராசியின் குறியீடு ஆட்டின் தலையாகும். இது இராசி மண்டலத்தின் முதல் இராசியாகும்.
2.ரிஷபம்:
கார்த்திகை நட்சத்திரத்தில் கடைசி 3 பாதங்கள், ரோகிணி நட்சத்திரத்தில் 4 பாதங்கள், மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 2 பாதங்கள் அடங்கிய இராசி இராசி ரிஷபம் ஆகும். இந்த இராசியின் குறியீடு காளையாகும். இது இராசி மண்டலத்தின் இரண்டாவது இராசியாகும்.
3.மிதுனம்:
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் கடைசி 2 பாதங்கள், திருவாதிரை நட்சத்திரத்தில் 4 பாதங்கள், புனர்பூசம் நட்சத்திரத்தில் முதல் 3 பாதங்கள் அடங்கிய இராசி மிதுனம் ஆகும். இந்த இராசியின் குறியீடு இரட்டையர்கள் ஆகும்.
4.கடகம்:
புனர்பூசம் நட்சத்திரத்தில் கடைசி 1 பாதம், பூசம் நட்சத்திரத்தில் 4 பாதங்கள், ஆயில்யம் நட்சத்திரத்தில் 4 பாதங்கள் அடங்கிய இராசி கடகம் ஆகும். இந்த இராசியின் குறியீடு நண்டு ஆகும்.
5.சிம்மம்:
மகம் நட்சத்திரத்தில் 4 பாதங்கள், பூரம் நட்சத்திரத்தில் 4 பாதங்கள், உத்திரம் நட்சத்திரத்தில் 1 பாதம் அடங்கிய இராசி சிம்மம் ஆகும். இந்த இராசியின் குறியீடு பெண் சிங்கம் ஆகும்.
6.கன்னி:
உத்திரம் நட்சத்திரத்தில் கடைசி 3 பாதங்கள், அஸ்தம் நட்சத்திரத்தில் 4 பாதங்கள், சித்திரை நட்சத்திரத்தில் முதல் 2 பாதங்கள் அடங்கிய இராசி கன்னி ஆகும். இந்த இராசியின் குறியீடு கன்னி பெண் உருவம் ஆகும்.
7.துலாம்:
சித்திரை நட்சத்திரத்தில் கடைசி 2 பாதங்கள், சுவாதி நட்சத்திரத்தில் 4 பாதங்கள், விசாகம் நட்சத்திரத்தில் முதல் 3 பாதங்கள் அடங்கிய இராசி துலாம் ஆகும். இந்த இராசியின் குறியீடு சமநிலையான தராசு ஆகும்.
8.விருச்சிகம்:
விசாகம் நட்சத்திரத்தில் கடைசி 1 பாதம், அனுஷம் நட்சத்திரத்தில் 4 பாதங்கள், கேட்டை நட்சத்திரத்தில் 4 பாதங்கள் அடங்கிய இராசி விருச்சிகம் ஆகும். இந்த இராசியின் குறியீடு தேள் ஆகும்.
9.தனுசு:
மூலம் நட்சத்திரத்தில் 4 பாதங்கள், பூராடம் நட்சத்திரத்தில் 4 பாதங்கள், உத்திராடம் நட்சத்திரத்தில் முதல் பாதம் அடங்கிய இராசி தனுசு ஆகும். இந்த இராசியின் குறியீடு வில் ஏந்திய குதிரை மனிதன் ஆகும்.
10.மகரம்:
உத்திராடம் நட்சத்திரத்தில் கடைசி 3 பாதங்கள், திருவோணம் நட்சத்திரத்தில் 4 பாதங்கள், அவிட்டம் நட்சத்திரத்தில் முதல் 2 பாதங்கள் அடங்கிய இராசி மகரம் ஆகும். இந்த இராசியின் குறியீடு மலை வரையாடு அல்லது முதலை ஆகும்.
11.கும்பம்:
அவிட்டம் நட்சத்திரத்தில் கடைசி 2 பாதங்கள், சதயம் நட்சத்திரத்தில் 4 பாதங்கள், பூரட்டாதி நட்சத்திரத்தில் முதல் 3 பாதங்கள் அடங்கிய இராசி கும்பம் ஆகும். இந்த இராசியின் குறியீடு கலசம் ஆகும்.
12.மீனம்:
பூரட்டாதி நட்சத்திரத்தில் கடைசி 1 பாதம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 4 பாதங்கள், ரேவதி நட்சத்திரத்தில் 4 பாதங்கள் அடங்கிய இராசி மீனம் ஆகும். இந்த இராசியின் குறியீடு இருமீன்கள் ஆகும்.
27 நட்சத்திரங்கள்:
1.அஸ்வனி
2.பரணி
3.கார்த்திகை
4.ரோகினி
5.மிருகசீரிஷம்
6.திருவாதிரை
7.புனர்பூசம்
8.பூசம்
9.ஆயில்யம்
10.மகம்
11.பூரம்
12.உத்திரம்
13.ஹஸ்தம்
14.சித்திரை
15.சுவாதி
16.விசாகம்
17.அனுஷம்
18.கேட்டை
19.மூலம்
20.பூராடம்
21.உத்திராடம்
22.திருவோணம்
23.அவிட்டம்
24.சதயம்
25.பூரட்டாதி
26.உத்திரட்டாதி
27.ரேவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக