27 நட்சத்திரத்தின் பெயர்கள் அஸ்வினி முதலாகிய ரேவதி வரை இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1.அஸ்வனி : இரலை, பரி, கிள்ளை, வாசி, கொக்கு, மா.
2.பரணி : அடுப்பு, அட்டுதல், சுசிதலம்.
3.கார்த்திகை : எரி, அங்கி, ஆரம்
4.ரோகினி : பார், தேர், உருள்வையம், சகடு, சாகாடு.
5.மிருகசீரிஷம் : மான்தலை, மிருகவதனம், மான்முகம்.
6.திருவாதிரை : யாழ், வீணை, உருத்திரன், சிவன்.
7.புனர்பூசம் : வேய், மூங்கில்கண், திகிரி, கடை.
8.பூசம் : குரு, மதி, தை.
9.ஆயில்யம் : பணி, பாம்பு, கட்செவி, புழக்கம்.
10.மகம் : நுகம், நாஞ்சில், கலப்பை.
11.பூரம் : ஆகு, பெருச்சாளி, உமை, சிவை.
12.உத்திரம் : குளம், ஏரி, தடாகம், வாவி.
13.ஹஸ்தம் : உத்தமன், பிரபலன், ஆரோகி.
14.சித்திரை : வஸ்திரம், ஒலியல், ஆடை, நீவி.
15.சுவாதி : கோகனகம், கமலம், சுடர், தீபம்.
16.விசாகம் : முறம், முற்றில், சுளகு.
17.அனுஷம் : புல்பனை நிலம், தாழி, போந்தை, பெண்ணை.
18.கேட்டை : அரி, கீடம், அதம்.
19.மூலம் : அசுரர், இராக்கதர், அவுணர்.
20.பூராடம் : நீர், புனல், பயம், அறல், கோ.
21.உத்திராடம் : முடி, முதம், மூர்த்தம்.
22.திருவோணம் : சீதரம், இரட்சகன், மால்மயன், மாதவன்.
23.அவிட்டம் : புள், பறவை, வீ.
24.சதயம் : செக்கு, காணம், ஆலை.
25.பூரட்டாதி : நாழி, குஞ்சம், படி.
26.உத்திரட்டாதி : அரசு, கோ, மன்னவன், முரசு பறை.
27.ரேவதி : ஓடம், நாவாய், தோணி, பாதை.
இதுவரை குறிப்பிட்ட அனைத்து பெயர்களும் அந்த நட்சத்திரத்திற்குரிய தனிப்பட்ட பண்புகளை வெளிப்படுத்தும். மேலும் இந்த நட்சத்திரத்திற்குரிய பொருள்களை இந்த பெயர்கள் மூலம் அறியலாம்.
அந்த குறிப்பிட்ட பொருட்கள் மூலம் அந்த பொருட்களை பயன்படுத்தும் போது அந்த குறிப்பிட்ட நட்சத்திரம் இயங்குகிறது.
உதாரணமாக : இரலை, பரி(குதிரை), கிள்ளை, வாசி, கொக்கு, மா ஆகியவற்றை பயன்படுத்தும் போது அல்லது உபயோகிக்கும் போது அல்லது பார்க்கும்போது சில குறிப்பிட்ட செயல்கள் அஸ்வினி நட்சத்திரம் மூலமாக இயங்குகிறது. தங்கள் தனிப்பட்ட ஜாதகத்தில் அஸ்வினி நட்சத்திரம் அதில் உள்ள கிரகமும் இயங்குகிறது எனக் கருத்தில் கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக