இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

ஆடு வாங்கும் முன் கவனிக்க

ஆடு வாங்கும் முன் கவனிக்க
At ஜனவரி 10, 2023
திருவிழாக்கள் மற்றும் இதர விஷேசங்களுக்கு மக்கள் ஆடு மற்றும் கோழிகளை வாங்குவது வழக்கம். ஆனால் அப்படி வாங்கும் பொழுது அவைகள் தரமானதாக உள்ளதா என பார்த்து வாங்குவதில்லை.

09-01-2023 அன்று செய்தி ஊடகமான நியூஸ் தமிழ் 24x7 ல் காணொளி வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

அது என்னவென்றால் கிருஷ்ணகிரி அடுத்த போச்சம்பள்ளி என்ற பகுதியில் நடக்கும் ஆட்டுச் சந்தையில் ஆடுகளை விற்பதற்க்கு முன் ஆடுகளின் எடையைக் கூட்டுவதற்காக ஒரு சிலர் நீருடன் மண் கலந்து சகதி நீராக அதற்கு வாய் வழியே குழாய் மூலம் செலுத்துகின்றனர்.

இதனால் அந்த ஆடுகள் குறிப்பிட்ட நாட்களுக்கு பின் உடல்நலக் குறைவினால் இறந்து விடுகின்றன. ஒரு சில ஆடுகள் இந்த நோயோடு விற்பனைக்கு வருகிறது. இதனால் தான் அந்த ஆட்டுக்கறிகள் சமைக்கும் போது துர்நாற்றம் வருவது, சுவை மாறுபடுவது இதனால் தான் என ஐயம் எழுகிறது. 

மேலும் இதை வாங்கி சமைத்து உண்பவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

இது போன்ற முறைகள் 1990 களுக்கு முன் ஒரு சிலர் ஆடுகளுக்கு வெறும் தண்ணீரை மட்டும் கொடுத்து கூடுதல் எடையை அதிகரிக்கச் செய்வார்கள் எனக் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் இன்றோ மேலும் எடையை அதிகரிக்க மண் கலந்த நீரை ஆடுகளுக்கு அளிப்பது மிகவும் ஆபத்தானது. வெறும் சொற்ப லாபங்களுக்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு மக்களின் உடல் நலத்தோடு விளையாடும் ஒரு சிலர் அவர்களால் மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது, அவப்பெயர் ஏற்படுகிறது.

மக்கள் இது போன்ற சந்தைகளில் ஆடுகளை வாங்கும் முன் கவனமாக ஆடுகளை பார்த்து வாங்க வேண்டும். 

மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
விழிப்புணர்வுகாகவே யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் வெளியிடப்பட்டதல்ல.

thanks: news tamil 24x7
link:https://youtu.be/FhnDVqEh4vc

Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக