மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர்களை தரிசிப்பது மிகப்பெரிய புண்ணியம். அந்த புண்ணியத்திற்கு வலுசேர்க்கும் வகையில் மும்மூர்த்திகள் ஒரு சேர காட்சியளிக்கின்றனர். அதுவும், குறிப்பாக நம் தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அந்த திருமூர்த்தி மலையில் தான்.
இங்கிருக்கும் மலையில் தான் சுயம்புவாக எழுந்தருளி உள்ளனர். இங்கு காணப்படும் கோயில் ஆனது குடைவரைக் கோயிலாகும். இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடமானது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு பகுதியாக உள்ளது. இதன் அருகில் பாய்ந்து ஓடும் தோணி நதி உள்ளது. இதனை பாலாற்றங்கரை என்று அப்பகுதி மக்கள் அழைப்பார்கள். இங்கு இருக்கும் ஈஸ்வரன் தான் அமணலிங்கேஸ்வரர் ஆக அருள் பாளிக்கிறார். இதில் அமணன் என்றால் குற்றமற்றவன் என்ற பொருள் உண்டு. அது போல அமணலிங்கம் என்றால் அழகிய லிங்கம் என்ற பொருள்படும். இதற்கு ஏற்பவே திருத்தளத்தில் காட்சி தரும் சிவபெருமான் ஆனவர் குற்றங்களில் இருந்து நீக்கியவராக காட்சி தருகிறார். இவரை திருமூர்த்தி ஆண்டவர் என்றும் மும்மூர்த்தி ஆண்டவர் என்றும் அழைப்பர். ஒரு சில காலங்களில் பெருமளவில் சமணர்கள் இங்கு வாழ்ந்துவந்தால், அம்மக்கள் இவருக்கு சமணலிங்கம் என்று அழைத்தனர். அதுவே காலப்போக்கில் அமணலிங்கம் என்று மருவி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தக் குடைவரைக் கோயிலுக்குள் தான் கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது. அதில், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் உற்சவமூர்த்திகளாக காட்சியளிக்கின்றனர். அங்குள்ள இந்த கோயிலில் இருக்கும் எட்டுக்கால் மண்டபத்தில் தான் மும்மூர்த்திகள் தங்கி இருந்து காட்சியளித்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு, அங்கு மும்மூர்த்திகள் குழந்தைகளாக விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த மலையின் அருகில் உள்ள கஞ்சமலையிலிருந்து கல் ஒன்று அக்குழந்தைகளை நோக்கி உருண்டு வந்ததாகவும். அந்த கல்லை சப்த கன்னியர்கள் ஏழு விரலி மஞ்சளை வைத்து அவற்றை தடுத்தது காப்பாற்றியதால், அந்த உருண்டு வந்த கற்கள் மும்மூர்த்திகளாகவும் அந்த ஏழு விரலி மஞ்சள் சப்த கன்னியர்களாகவும் ஐக்கியமானதாக தல வரலாறு கூறுகிறது.
இந்தக் கோயிலின் தலவிருட்சமாக அரசமரம் இருக்கிறது மற்றும் தீர்த்தமாக அருகில் இருக்கும் தோணி நதி உள்ளது. இந்தக் கோவிலில் விநாயகர், முருகன் மற்றும் நவகிரகங்களுக்கு தனித்தனியாக சன்னிதிகள் இருக்கிறது. மேலும், இங்குள்ள விநாயகரை சுந்தர கணபதி என்றும் அழைக்கின்றனர். அது போலவே இங்கிருக்கும் முருகப்பெருமானை பாலசுப்பிரமணியன் என்று அழைக்கின்றனர். இக்கோவிலின் முன்பு 30 அடி உயரத்தில் தீபகம்பம் அமைந்துள்ளது. இந்த கம்பத்தின் அடியில் பத்ரகாளி, வனதுர்க்கை, விசாலாட்சி, ஊர்த்துவ தாண்டவர், வீரபத்திரர், நரசிம்மர், இராமர் மற்றும் வேணுகோபாலர் ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் திசைக்கு ஒன்றாக அஷ்டதிக்கிற்கு சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இந்தக் கோயிலின் சிறப்புமிக்க ஒன்றாக அதன் வழிபாட்டு முறைகள் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் தங்கள் கொண்டுவரும் சந்தனத்தை மும்மூர்த்திகளின் மீது எறிந்து வழிபடுவார்கள். அவ்வாறு, சந்தனமானது மும்மூர்த்திகளின் நெற்றியில் விழுந்தால் பக்தர்களின் நல்லதொரு வேண்டுதல் நிறைவேறுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. அதுபோலவே உப்பும் மிளகும் இங்கே கொட்டி வழிபடுவதால் பக்தர்களின் தங்கள் குறைகள் நீங்குவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய திருமூர்த்தி மலைக்குச் சென்று அங்கு இருக்கும் மும்மூர்த்திகளை வழிபட்டு நம் குறைகளையும் நல்லதோரு வேண்டுதல்களையும் இறைவன் தீர்த்து வைப்பார் என்பது தெரிய வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக