இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

பாலரிஷ்ட தோஷ நட்சத்திர நாட்கள்

பாலரிஷ்ட தோஷ நட்சத்திர நாட்கள்
At ஜூலை 20, 2023
பின்வரும் நட்சத்திரமும் கிழமையும் வரும் நாட்கள் புதியதோர் துவக்கத்திற்கு பயன்படுத்தக் கூடாது, சுபகாரியங்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறாக, பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தக்கூடியது.

ஞாயிற்றுக்கிழமையில் பரணி நட்சத்திரம் ஆகாது.

திங்கட்கிழமையில் சித்திரை நட்சத்திரம் ஆகாது.

செவ்வாய்க்கிழமையில் உத்திராடம் நட்சத்திரம் ஆகாது.

புதன்கிழமையில் அவிட்டம் நட்சத்திரம் ஆகாது.

வியாழக்கிழமையில் கேட்டை நட்சத்திரம் ஆகாது.

வெள்ளிக்கிழமையில் பூராடம் நட்சத்திரம் ஆகாது.

சனிக்கிழமையில் ரேவதி நட்சத்திரம் ஆகாது.

காரணங்கள்:

ஞாயிற்றுக்கிழமையில் உள்ள பரணி நட்சத்திரத்தின் போது தான் துரியோதனன் திரௌபதி முன் அவமானப்பட்டான்.

திங்கட்கிழமையில் உள்ள சித்திரை நட்சத்திரத்தின் போது தான் தச்சன் யாகத்தின் போது பார்வதியை அவமானம் படுத்தினான்.

செவ்வாய் கிழமையில் உள்ள உத்திராடம் நட்சத்திரத்தின் போது தான் துர்வாச முனிவரிடம் இந்திரன் சாபம் பெற்றான்.

புதன்கிழமை உள்ள அவிட்டம் நட்சத்திரத்தின் போது தான் கம்சன் ஆல் ஏவப்பட்ட அரக்கனை கிருஷ்ணர் வதம் செய்தார்.

வியாழக்கிழமையில் உள்ள கேட்டை நட்சத்திரத்தின் போது தான் திரிபுர சம்காரத்திற்கு செல்லும் போது விநாயகரின் தேர் அச்சு முறிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமையில் உள்ள பூராடம் நட்சத்திரத்தின் போது தான் மகாபலி சக்கரவர்த்தி பாதாளத்தில் அழுத்தப்பட்ட நாள்.

பலன்கள்:

இது வரும் நாட்களில் திருமணம் செய்தால் அந்தப் பெண் விதவை ஆவாள்.

இதில் வீடு கட்டிய மன்னன் மரணம் அடைவான்.

இதில் பெண் ருதுவானால் மலடியாவாள்.

இதில் பிறந்த குழந்தை நோய் அல்லது ஆயுள் குறைவு அல்லது மரணம்.

இன்னும் பல என்று புராணங்கள் வாயிலாக சாஸ்திரங்கள் தெரிவிப்பதாக ஒருக் கூற்று.

Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக