இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

இந்தோனேசியாவில் ஓர் இந்துக் கோயில் : பிரம்பானான் கோயில்

இந்தோனேசியாவில் ஓர் இந்துக் கோயில் : பிரம்பானான் கோயில்
At ஜூலை 05, 2023
இந்தோனேசியா வில் யாவாப் என்ற பகுதியில் அமைந்த ஓர் இந்து கோயில். இந்த கோயில் மிகப் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் பெயர் 'பிரம்பானான் கோவில்' ஆகும். இந்த கோயில் ஆனது சுமார் 9-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ஒரு பழமையான இந்து கோயிலாகும் மற்றும் உலக பாரம்பரிய தலங்களில் ஒன்றாக, யுனெஸ் கோவால் அறிவிக்கப்பட் டுள்ளது. இந்த கோயிலில் மைய விமானம் சுமார் 47 மீட்டர் (154 அடி) உயரம் கொண்டது. இது தெற்காசியா வின் மிகப் பெரிய கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு வருடம் தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த கோயிலை வந்து தரிசித்து செல்கின்றனர். 

இந்த கோயிலானது ஆரம்ப காலத்தில் சிவபெருமானுக்கு கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்திருக்கிறது. இதனை, அப்பகுதி மக்கள் 'சிவக்கிரகம்' என்று அழைத்தனர். பின், பொது.ஆ 856 பின் சிவபெருமானுக்கு பக்கத்தில் இரு புறங்களிலும் பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் தனியாக கோயில் எழுப்பப்பட்டு இருக்கிறது. அதனால் இந்த கோவிலில் நாம் மும்மூர்த்திகளையும் காணலாம்.

சஞ்சய வம்சத்தைச் சேர்ந்த ராகாய் பிகாதன் என்ற மன்னன் இக்கோயிலை கட்டியதாக சொல்லப்படுகிறது. இக்கோயில் பொது.ஆ 850-களில் தொடங்கப்பட்ட இந்தக் கோயிலின் கட்டுமானம், அந்த மன்னருக்கு பின், லோக பாலன், பாலிதுங் மகாசம்பு போன்ற மன்னர்களால் மேற்கொள்ளப்பட்டு, நிறைவுற்றது. பிற்கால மன்னர்களான தட்சன், துலோதுங் முதலான மன்னர்களால் இந்தக் கோயில் விரிவாக்கம் பெற்றிருக்கிறது.

இந்த கோயில் பொது.ஆ 930 பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களினாலும் தலைநகர் மாற்றங்களினாலும் பராமரிப்பின்றி இருந்திருக்கிறது. மேலும், 11 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தாழும் இந்த கோயில் பாதிப்படைந்து இருக்கிறது. இவ்வாறாக பராமரிப்பின்றி இருந்த இந்த கோயில் அதனை சுற்றி இருக்கும் பகுதிகள் அனைத்தும்  மரங்களும் செடி கொடிகளும் வளர்ந்து ஒரு பெரும் வனமாக மாறிப் போனது. இந்த வனத்தில் வாழ்ந்த மனிதர்களை தவிர்த்து பிற பகுதிகளில் இப்பவர்கள் இந்த கோவிலின் சிதைந்தப் பகுதிகளை பயன்படுத்தி தங்களது கட்டுமான பணிக்கு பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த கோவிலை சீரமைக்கும் பணியை 1918ல் அந்தப் பகுதியை ஆட்சி செய்த டச்சு அரசு ஆரம்பித்தது. பிறகு, 1953ல் இந்த கோயிலின் பிரதானமான விளங்கும் சிவன் கோயில் முழுவதும் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின் 240 பரிவார கோயில்கள் இருந்ததாக கூறப்படுகிறது ஆனால் இன்றளவில் ஒன்றிரண்டு தவிர மற்ற அனைத்தும் பராமரிப்பின்றி சிதைந்து போய்விட்டது. அவற்றுள் நந்தி, கருடன், அன்னப்பறவை ஆகிய தெய்வங்களின் வாகனத்திற்கு தனித்தனியே சன்னதிகள் இருந்திருக்கிறது மற்றும் பரிவார வீதிகளின் நான்கு வாசல் களை இணைக்கும் வகையிலான பல்வேறு சிற்றாலயங்களும் சன்னதிகளும் இருந்திருக்கின்றது. இங்குள்ள சுற்றுப் பிரகாரத்தில் இராமாயணக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சிவபெருமான் சிலையானது 3 மீட்டர் உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. சிலையை சுற்றி மூன்று கோட்டங்களில் கணபதி, துர்க்கை, அகத்தியர் ஆகியோர் சிலைகளும் காணப்படுகிறது. சூரியன், சந்திரன்  சிற்பங்களும் உள்ளது. இந்த பிரம்பானான் கோயில் ஆனது இந்தோனேசியாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். யாவா மற்றும் பாலி இந்துக்கள் தங்களது சமயச் சடங்குகளை இப்பகுதியில் தொடர்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக