இன்றைய காலத்தை (2023) கருத்தில் கொண்டு நாம் பார்த்தால், ஏறத்தாழ 12க்கும் மேற்பட்ட மதங்கள் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. அதிலும், இந்து மதம் சுமார் 105 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.
முதலில் நாம் இந்து மதத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால்; அதன் தோற்றத்தை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி பார்த்தோம் என்றால், இந்து மத நூல்களை ஆராய்ந்து அதில் இருக்கும் கருத்துக்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்து மத நூட்களாக கருதப்படுவது புராணங்கள், இதிகாசங்கள், உபநிடதங்கள் மற்றும் வேதங்கள் என பலதரப்பட்ட நூல்கள் ஆகும். இதன் வாயிலாக அறியவரும் கருத்துக்களில் நாம் முக்கியமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது அதில் குறிப்பிடப்பட்டுள்ள யுகங்கள் மற்றும் காலங்கள் பற்றிய தகவல்கள் தான்.
புராணங்களும் வேதங்களும், இதிகாசங்களும் உபநிடதங்களும் உண்மையா? அல்லது இல்லையா? இன்று ஆராய்வதை தவிர்த்து; இந்த உலகம் அறிவியலை ஏற்றுக் கொண்டிருப்பது நடப்பு காலங்களில் மட்டும் தான் என்று நாம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், அந்த காலங்களில் அறிவியல் ரீதியாக விளக்கக்கூடிய எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியும் எட்டப்படவில்லை அல்லவா!.. ஆனால், இந்த தகவல்கள் யாவும் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தியின் மூலமாகத்தான் வெளிப்பாட்டிருக்க வேண்டும் என அறிய முடிகிறது.
அவ்வாறு அந்த நூட்கள் மூலம் யுகங்கள் ஆனது நான்கு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்:
1. கிருத யுகம் - 17,28,000 ஆண்டுகள்
2. திரேதா யுகம் - 12,96,000 ஆண்டுகள்
3. துவாபர யுகம் - 8,64,000 ஆண்டுகள்
4. கலியுகம் - 4,32,000 ஆண்டுகள்
இவ்வாறாக நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு மகா யுகம் என்றும் சதுரயுகம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 12 மகா யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு 14 மன்மந்திரங்களைக் கொண்டது ஒரு கல்பம் என்று குறிப்பிடப்படுகிறது.
இப்படியாக மொத்தமாக 30 கல்பங்கள் உள்ளது. இதை நாம் கணக்கீடு செய்தால் நம் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு மிகப் பெரும் கால அளவை குறிக்கிறது. ஆனால், நாம் தற்காலத்தில் உள்ள தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரங்களையும் கோள்களையும் மட்டுமே புகைப்படம் எடுக்கும் அளவிற்கு தான் வளர்ந்து இருக்கிறோம், என்பதில் ஐயமுமில்லை ஆச்சரியமுமில்லை. ஆனால், அந்த வேதங்களும் புராணங்களும் குறிப்பிடும், இந்த கால அளவுகளை நம் கருத்தில் கொள்ளும் பொழுது; இந்து மதம் என்பது இவைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது என்று தெரிய வருகிறது.
எனவே இந்து மதத்தின் தோற்றம் குறித்து நாம் அறிய முற்பட்டால் அது ஆதி அற்றது; என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் பூமியில் கிடைக்கும் தடயங்களைக் கொண்டு ஆராய முற்பட்டால் அது ஏறத்தாழ சில ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டவையாகத்தான் இருக்கும்.
ஆனால், இந்த புவியல் தடயங்கள் யாவும் காலத்தாலும் மற்றும் இயற்கை சீற்றங்களாலும் அழியக்கூடியவையே. எனவே, இந்து மதம் இந்த காலங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு முதலில் தோன்றியிருக்க வேண்டும் என புராணங்களும் வேதங்களும் மூலம் நாம் உறுதியாக கூறலாம்.
அது எப்படி இந்து மதம் என்ற பெயர் வந்தது?
அந்தப் பெயர் எப்போது உருவானது? யாரால் இந்த பெயர் ஏற்பட்டது? என்று நாம் அறிய வேண்டும்.
இந்து மதத்தின் பெயர் காரணத்தை பற்றி அறிய முற்படும் முன். இந்தியாவின் பெயர் காரணத்தை நாம் அறிந்திருக்க வேண்டும். அது என்ன இந்தியாவின் பெயர் காரணம்? ஆம், அதில் ஒரு விஷயம் இருக்கிறது.
இந்தியா என்ற பெயருக்கான காரணங்களாக பல்வேறு கூற்றுகள் இருந்தாலும், அதில் பிரதானமாக ஏற்றுக்கொள்ள பட்ட ஒரு கூற்று, அதை எடுத்துக் கொள்ள வேண்டியது மேற்குலக நாடுகள் இட்டுச் சென்ற அந்தப் பெயர் காரணம் தான்.
பண்டைய காலங்களில் பல்வேறு தரப்பட்ட பிற நாட்டவர்களும் மற்றும் மன்னர்களும் குறிப்பாக சொல்லப் போனால் மேற்குலக நாடுகளின் மன்னர்கள் இந்தியாவின் நிலப்பரப்பில் படையெடுப்பதற்கு "சிந்து நதி"-யை கடந்து வர வேண்டும் என்று கூறுவார்கள். இதுவே, காலப்போக்கில் "இந்து" என்று மாறியது.
இவ்வாறு பிற மதத்தினர்கள், இந்து மதத்தை குறிப்பிடுவதற்கு தாங்கள் பயன்படுத்திய பெயர்தான் இந்து. அதாவது சிந்து நதிக்கு அப்பால் உள்ள நிலப்பரப்பில் தோன்றிய அல்லது அங்குள்ள மக்களால் பின்பற்றி வரும் மதமே காலப்போக்கில் "இந்து மதம்" என பெயர் வரக்காரணம்.
பிற மதத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் மதத்தை அடையாளப்படுத்திக் கொள்ள அதற்கான பெயர்களை இட்டு வைத்து வந்தனர். ஆனால், இந்து மதமானது காலத்திற்கு அப்பாற்பட்டது என மேல் பத்தியில் நாம் பார்த்திருந்தோம். அப்படி இருக்கும் பொழுது, அந்த காலகட்டங்களில் பிற மதங்கள் இருந்திருக்க வாய்ப்பே இல்லை அல்லவா!... ஆகையால், அக்கால கட்டத்தில் வாழ்ந்து வந்த மக்கள் இதை ஒரு மதமாக கருத்தில் கொள்ளவில்லை. என நாம் அறியலாம். ஆனால், இதை அவர்கள் ஒரு வாழ்க்கை முறையாகவும் கலாச்சார பண்பாடாகவும் பின்பற்றி வந்தனர் எனவும் நாம் அறியலாம்.
இப்படி இருக்கையில் இந்து மதமானது; இந்த நிலப்பரப்பிலிருந்து தான் பல்வேறு நாடுகளுக்கு பரவியதாக தெரிய வருகிறது. எனவே, "இந்து மதம் என்பது மதம் அல்ல, ஆனால் இந்தியாவின் மதம்" என்று நாம் தெளிவாக அறியலாம்.
ஊடகங்களிலும் பொதுவெளிகளிலும் பலதரப்பட்ட மக்கள் "இந்து என்பது மதம் அல்ல" என்று பேசுபவர்கள் யாராக இருந்தாலும்; இந்த பதிவை எடுத்து நீட்டுங்கள்!.. அவர்களுக்கு இது ஒரு நெத்தியடியாக இருக்கும். அறியாமை குருட்டை விளக்கட்டும்.
இன்ற அளவிலும் பல்வேறு மதங்களில் பலதரப்பட்ட பிரிவுகளும் இனக் குழுக்களும் மற்றும் பல்வேறு வழிபாட்டு முறைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. அதையே தான் இந்து மதமும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் பல்வேறு வழிபாட்டு முறைகளும் பிரிவுகளும் உள்ளது.
இந்து சமய வழிபாட்டு முறைகளாக நாம் இன்றளவிலும் காண்பது.
1. பூசை
2. அர்ச்சனை
3. தியானம்
4. தவம்
5. யாகம்
6. ஓதுதல்
7. விரதம்
8. பலி இடுத்தல்
9. மந்திர உச்சாடனம்
என பலவுள்ளது.
இந்து மதத்தில்
1. சைவம்,
2. வைணவம்,
3. சாக்தம்,
4. காணாபத்தியம்,
5. கௌமாரம்,
6. சௌரம்
என ஆறு உட்பிரிவுகள் உள்ளன. இதில், சைவம் - சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் முறை, வைணவம் - மகாவிஷ்ணுவை முழுமுதற்கடவுளாக வழிபடும் முறை, சாக்தம் - உமையை முழுமுதற்கடவுளாக வழிபடும் முறை, காணாபத்தியம் - கணபதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் முறை, கௌமாரம் - முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் முறை, சௌரம் - சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடும் முறை.
இன்றளவில் இந்துக்கள் அனைவரும்; இந்த ஆறு வழிபாட்டு முறைகளையும் அதனுடன் சேர்த்து தங்களின் குலதெய்வ வழிபாட்டு முறையும் முதன்மையாக கொண்டு நாள்தோறும் பின்பற்றி வருகிறார்கள். இதில் எந்த ஒரு பாகுபாடும் வேறுபாடும் அவர்கள் காட்டுவதில்லை. இன்றளவும் இந்துக் கோயில்களில் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனியே சன்னதி இருக்கிறது. அங்கே வழிபடும் பக்தர்களும் பொதுமக்களும் எந்தவொரு தெய்வத்தையும் வழிபட மறுப்பதில்லை. ஆனால், இங்கு ஒரு சிலர்கள் இதனை பயன்படுத்தி "இந்து என்பது மதம் அல்ல" என்று கூறி வருகிறார்கள். இது முற்றிலும் தவறானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஏனென்றால், இந்து மதத்தில் உள்ள நூல்கள் யாவும்; இந்த வழிபாட்டு முறையில் உள்ள கடவுள்கள் யாவும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்று கூறுகிறது.
இந்த நூல்கள் யாவும் வெவ்வேறு கால கட்டங்களில் அந்த கடவுள்கள் பற்றி உயரிய கருத்துக்களை தொகுப்பாக கூறியிருக்கிறது. இதை அறிந்த மக்கள்; தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப முழுமுதற் கடவுளாக வைத்து வழிபட்டு வந்ததே இத்தனை உட்பிரிவுகள் ஆகும். ஆனால் உண்மையில் இந்து மத கடவுள்கள் அனைவரும் வழிபட வேண்டும் என்பதே இதன் கருத்து ஆகும். அத்துடன், இன்றளவும் எந்த மதங்களிலும் இல்லாத பல்வேறு சொந்தம் பந்தங்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்ற நல்ல செயலை உணர்த்துகின்றது.
மேலும், இறைவன் என்பவன் எங்கும் நிறைந்திருக்கிறான், எதிலும் இருந்திருக்கிறான் மற்றும் உன்னுள்ளும் இருக்கிறான் என்பதே இது கூற வரும் கருத்து ஆகும்.
எனவே, இந்து மதம் என்பது மதம் அல்ல. அது ஒரு பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் முறையாகும். மேலும், இது "இந்தியாவின் மதம்" என்பதே உண்மையில் பொருந்தமாக இருக்கும். இதை அறியாதவர்களுக்கு இந்த பதிவை அனுப்பி அறியப்படுத்துங்கள்.
நன்றி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக