இந்த பூமியில் மனிதன் உட்பட பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அந்த உயிரினங்கள் காலத்திற்கு ஏற்ப வாழ்வதற்கு பல்வேறு மாற்றங்களை தங்களுக்குள் ஏற்படுத்துகின்றன. அவற்றுள் பெரும்பாலான உயரினங்கள் சூழலுக்கேற்ப தங்கள் தோற்றங்களையும் செயல்பாடுகளையும் மாறுபடுத்திக் கொண்டே தான் இருக்கிறன. அவ்வாறு இருக்கையில் மனிதனும் ஒரு சமூக விலங்கு தான் என்று அனைவரும் அறிந்ததே!. இதில் மனிதர்களுக்கு மட்டும் என்ன விதிவிலக்கா?. இவ்வாறு பூமி தோன்றியதிலிருந்து இன்று வரை பல்வேறு மாற்றங்களை சந்தித்து இருக்கிறது. "இனி வரும் காலமும் இப்படித்தான்" பல்வேறு மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும். அதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
எந்த ஒரு உயிரினமும் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது. இந்த மாற்றமானது பெரும்பாலான நேரங்களில் மற்ற எந்த விலங்குகளையும் உயிரினங்களையும் பாதிப்படையச் செய்வதில்லை. அதனால் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைப்பாத விலங்குகளும் உயிரினங்களும் காலத்திற்கு ஏற்ப மறைந்து கொண்டுதான் இருக்கிறது. அதுபோலவே, நடப்பு உலகில் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சிகளும் பொருளாதார சூழ்நிலைகளும் பெரும் மாற்றத்தை சந்தித்துக் கொண்டே வருகின்றது. இந்த மாற்றமானது மனிதர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தாக்கத்தை விடவும் பிற உயிரினங்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவற்றை எல்லாம் கடந்து வர முடியாத உயிரினங்கள் அழிவில் விளிம்பில் இருக்கும் உயிரினங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு மனிதன் இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத மனிதர்கள் தான் அந்நிலையை எட்ட கூடும்.
அது எப்படி தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பொருளாதார சூழ்நிலை மாற்றங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்? இதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சில உதாரணங்களை நாம் பொருத்தி பார்க்க வேண்டும்.
உதாரணமாக அந்த காலத்தில் மனித உழைப்பை மட்டுமே நம்பி இருந்த தொழில் நிறுவனங்கள், 'நிலக்கரி' என்னும் கனிம பொருள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான், "நீராவி இயந்திரங்கள்" உருவாக்கப்பட்டது. இதனால் தங்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் என்று ஐயம் கொண்டார்கள். ஆனால் என்னவோ, அந்த நீராவி இயந்திரங்களை பயன்படுத்தி, பல்வேறு விதமான தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாகின.
அதேபோல் தான் மின்சாரமும், இவ்வாறு மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது தங்கள் தொழில் நிறுவனங்கள் வேலை இழக்கும் என்று ஐயம் ஏற்பட்டது. ஆனால், அது அவ்வாறு அல்ல. அந்த மின்சாரம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோக பொருள்களில் இருந்து பல்வேறு கருவிகள் வரை இந்த மின்சாரத்தால் இயங்குகிறது. இவ்வாறு இந்த மின்சாரம் பல்வேறு விதமான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது.
இதன் மூலம் நமக்கு தெரிய வருவது என்னவென்றால், காலத்திற்கு ஏற்ப பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டும் இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு நாம் பயணிக்க பழகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாறாதவர்கள் தான் "வேலை இழப்பு, வேலையின்மை" என்ற பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த தொழில்நுட்பம் வளர்ச்சிகளும் மாற்றங்களும் சுற்றுச்சூழலுக்கு ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த தாக்கத்தால் மனிதனை விடவும் பிற உயிரினங்களுக்கு அது அச்சுறுத்தலாக மாறிக்கொண்டே வருகிறது. எனவே இதை முறையாக பயன்படுத்தி வழி நடத்திட ஒவ்வொரு மனிதருக்கும் பொறுப்பு உள்ளது.
இது போன்ற சூழ்நிலை தான் 2000 களின் முற்பட்ட காலங்களில் கணினி என்ற கருவியை பற்றி யாரும் பெரிதாக அறிந்ததில்லை. ஆனால், இன்று என்னவோ 2020 ல் அனைவரும் கணினியை பயன்படுத்த பழகி விட்டோம். இதனால் மனித உழைப்பு பெரும்பாலும் குறைக்கப்பட்டது. இது ஏற்படுத்தும் கழிவுகள், மின்னணுக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பெறும் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. அதேபோலத்தான் வரும் காலத்தில் செயற்கை நுண்ணறிவு இருக்கும். இது வாழ்க்கை சூழ்நிலையில் பல்வேறு தொழில் மாற்றங்களையும் வேலை வாய்ப்புகளையும் பல மாற்றங்களை உருவாக்கும். இதனால் பல்வேறு தொழில் இழப்புகளும், வேலை இழப்புகளும் ஏற்படும். அதற்கேற்றவாறு நாம் இதை பயன்படுத்தி, புதிய தொழில் வாய்ப்புகளையும் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். மேலும், அதை பயன்படுத்தி பயணிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
"என்று மனித உழைப்புக்கு தேவையின்றி போகிறதோ அன்று மனித வள தேவையற்றதாக மாறுகிறது".
இது போன்று வரும் காலங்களில் பல்வேறு தொழில் நுட்பங்கள் வரலாம். அதை நாம் முறையாக பயன்படுத்தி, பயணிக்க வேண்டும். எனவே, இனி வரும் காலம் இப்படித்தான் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக