பசு என்றாலே நினைவுக்கு வருவது ஒன்று தான். அது என்னவென்றால் பால். பொதுவாக, பசுவை புனிதமாக கருதி வளர்க்கும் ஒரே நாடு இந்தியா மற்றும் இந்துக்கள் தான். ஏன் இந்தியர்கள் மற்றும் இந்துக்கள் பசுவை புனிதமான விலங்காக கருதி, வணங்கி வளர்த்து வருகின்றனர்? அதைப்பற்றிய பல்வேறு தகவல்களை இந்த பதிவில் நாம் அறியலாம்.
பொதுவாக, பசு என்பது பெண் மாடு இனத்தைச் சார்ந்தது. இது இன்றளவும் பிரதான உணவுப் பொருளான நாம் பருகக்கூடிய "பால்" - ஐ உற்பத்தி செய்யக்கூடிய ஒரு வீட்டு விலங்கு. பல்வேறு விலங்குகள் பாலை உற்பத்தி செய்தாலும், இதில் பசுமாட்டை தான் பால் உற்பத்திக்கு முதன்மையாக கருதப்படுகிறது. ஏன் அவ்வாறு இந்தியர்கள் பசும்பாலை விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக பாரம்பரிய நாட்டு பசு மாட்டின் பாலையே விரும்புகிறார்கள்.
இன்றளவும் பல்வேறு சீமை பசு மாடுகள் மற்றும் பல்வேறு மாற்றினங்கள் வந்தாலும், நமது இந்திய நாட்டில் காணப்படும் "பாரம்பரிய பசுமாடு" தான் மிக முக்கியம் ஆகக் கருதப்படுகின்றது. இது தரக்கூடிய பாலில் தான் மிக நல்ல குணங்களும் சத்துக்களும் அடங்கி இருக்கிறது. இதை அறிந்த நம் முன்னோர்கள், வருங்கால தலைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று முதன்மையாக வலியுறுத்துகின்றனர். நமது இந்திய நாட்டில் காணப்படும் பாரம்பரிய பசுமாடு ஆனது, பெரும்பாலும் தூய்மையை விரும்பக் கூடியது. ஏனென்றால், தன்னுடைய பசுஞ்சாணத்தில் கூட அமராது.
பசுமாடானது சுறுசுறுப்பான மற்றும் தாய்மை குணம் உடைய ஒரு வீட்டு விலங்காக விளங்குகிறது. ஏனென்றால், தனது கன்றுக்குட்டி இல்லாமல், பசுமாட்டை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிமையானது அல்ல. பிற மாட்டினங்களை காட்டிலும் நமது பாரம்பரிய பசு ஆனது மேய்ச்சல் நிலத்திலிருந்து சரியாக தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பும் நினைவாற்றல் கொண்டது. அதே போல் இதன் பாலிலும் நினைவாற்றலை அதிகரிக்கக் கூடிய குணங்கள் உள்ளது.
பசுவின் முதுகில் இருக்கும் நரம்புகள் பகல் பொழுதில் பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்துத் தருகிறது. இதனால் அது தரும் பாலிலும் பிரபஞ்ச ஆற்றல் நிறைந்திருக்கிறது. இது தரும் பாலானது மென்மையானது மற்றும் குளிர்ச்சியை தரக்கூடியது. இதனால் எளிதில் செரிமானம் ஆகக் கூடியது. இதில் கொழுப்பு சத்துக்கள் குறைவாக இருக்கிறது. இரத்த சக்கரையை பிற மாட்டினங்களின் பாலைக் காட்டிலும் அதிகரிக்க செய்யாது. இந்த பால் ஆனது எத்தனை முறை காய்ச்சினாலும் அதன் சத்துக்கள் அழியாது.
இத்தகைய மருத்துவ குணங்கள் உடைய பால் தரும் பசுவானது எத்தனை மாடுகளுக்கு மத்தியிலும் தன் பசுக் கன்றை கண்டுபிடித்துக் கொள்ளும். அதே போல் கன்றும் தன் தாயை அடையாளம் கண்டுகொள்ளும் தன்மை படைத்தது.
இத்தகைய பல நல்ல குணங்களை உடைய பசுவை; நம் இந்தியர்கள் பெரும்பாலும் கடவுளாக வணங்குகிறார்கள். ஏன் அவ்வாறு வணங்க வேண்டும்? ஏனென்றால், மேலே குறிப்பிட்ட பல காரணங்களுள் இதுவும் ஒன்றாகத்தான் இருக்கும். அறிவியல் எதுவும் வளராத அந்த காலகட்டங்களில், மக்களுக்கு இத்தகைய அறிவியல் காரணங்கள் எதுவும் புரியாது மற்றும் அவர்களுக்கு அது ஒரு வியப்பை ஏற்படுத்தும். மேலும் அன்றைய காலக்கட்டங்களில் மக்கள் உணவுக்காக, ஆடு, மாடு, கழுதை போன்ற பல்வேறு வகைப்பட்ட விலங்குகளின் பால் பொருட்களையும் பயன்படுத்தி வந்தார்கள்.
இதிலிருந்து வேறுபடுத்தி "பசும்பாலை பெரும்பாலும் பயன்படுத்த வேண்டும்" என்ற நோக்குத்திற்காக தான்; நம் நாட்டு பசுக்களைத் தெய்வங்கள் வாழும் இடமாகவும் மற்றும் தெய்வமாகவும் என்று புனிதமாக காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் ஒரு சில மக்களின் பால் பொருட்களை பயன்படுத்தாதவர்களும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே "மாட்டினுள் பல்வேறு தெய்வங்களும் தேவர்களும் வசிப்பதாக" உருகப்படுத்தி ஆன்மிக சார்ந்து வழிபாடு செய்யப்பட்டது. மேலும் இவ்வாறு காட்சிப்படுத்தப்படுவதனால் "அந்த தெய்வீக குணங்களும் பலன்களும் மக்களுக்கு கிடைக்கும்" என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டது.
இவ்வாறாக பல பண்பாடுகள், பழக்கவழக்கங்களை "நம் முன்னோர்கள் அறிவியல் சார்ந்து கூறினால் மக்களுக்கு புரியாது" என்பதால் தான் ஆன்மிகம் சார்ந்து முறைப்படுத்தினார்கள். என்பதே இதன் ஆழமான உண்மை. நாம் இதை அறிந்து கொண்ட பின், அனைவரும் பசுவை பேணி காத்து, இதன் பால் பொருட்களை அன்றாடம் முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் பிற நாட்டு மாடுகள் மற்றும் பிற மாட்டினங்களின் பால் பொருளை பயன்படுத்துவதை காட்டிலும், நம் நாட்டு மாட்டு பசுவின் பால் பொருளை பருகுவதே, "நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் சத்துகளையும் தரவல்லது" என்று கருத்தில் கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக