பொதுவாக தேங்காய் என்பது சமையலுக்கு மட்டுமின்றி வழிபாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு உணவு பொருள். நம் முன்னோர்கள் காலம் தொட்டு இன்றைய தலைமுறை வரை கோவிலில் தேங்காய் உடைப்பது பின்பற்றப்பட்டு வருகிறது. அதற்கான காரணம் மற்றும் அறிவியல் பூர்வமான விளக்கம் என்னவென்றால், பொதுவாக தேங்காய் வருடம் முழுவதும் வளரக் கூடிய ஒன்று. தென்னை மரம் பூ விட்ட நாளிலிருந்து தேங்காய் வளர்கிறது. அது முழுவதுமாக வளர ஏறத்தாழ ஏழு முதல் பன்னிரண்டு மாதங்கள் எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு அந்த தேங்காய் வளரக்கூடிய காலங்களில் நெருப்பு (சூரிய ஒளி), நிலம், நீர், காற்று மற்றும் விண் ஆகிய பஞ்சபூத சக்திகளை தன்னுள்ளே கொண்டு வளர்கிறது. இதனால் அந்த பஞ்சபூத சக்திகளை அடக்கிய தேங்காயை வழிபாட்டில் உடைக்கும் பொழுது, அந்தப் பஞ்ச பூத சக்திகள் அந்த இடத்தை சுற்றி குவிகின்றன. இதனால் நம் வழிபாட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய வேண்டுதல், பஞ்சபூத சக்திகளால் நிறைவேற்றப்படுவதற்கு துணையாக அமைகிறது.
பிரபஞ்சம் அனுமதிக்காத ஒன்றை இந்த பஞ்சபூதங்கள் அனுமதிப்பதில்லை. அதனால் தான், தேங்காய் என்பது சகுனத்தோடு தொடர்பு படுத்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக