இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

ஜோதிடம் எனும் பேரருள்

ஜோதிடம் எனும் பேரருள்
At ஜனவரி 21, 2024
ஜோதிடம் என்னும் பேரருள் இந்த தலைப்பிற்கு ஏற்றவாறு ஜோதிடம் எனும் அற்புதமான ஒரு தெய்வீக கலையை பற்றி இந்த பதிவில் நாம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடம் என்பது மனித குலத்திற்கு கிடைத்த ஒரு பேரருளாகத்தான் அமைந்திருக்கிறது. என்று சொன்னால் அது மிகையாகாது. அதனால் தான் இந்த தலைப்பில் அறிவியல் அல்லது தொழில்நுட்பம் என்ற சொற்களை பயன்படுத்தவில்லை, அதற்கான தெளிவான விளக்கங்களையும் எனது ஆய்வு கருத்துகளையும் இங்கே அறியலாம்.

பொதுவாக, ஜோதிடம் என்பது வானியல் சாஸ்திரத்தின் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு செயல்படுகிறது. இது நம் பூமிக்கு வெளியே உள்ள வான்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களையும் சுற்றி வரும் கோள்களையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு தெய்வீக கலை ஆகும். இப்படிப்பட்ட தெய்வீக கலையை பல்வேறு காலங்களில் வாழ்ந்த சித்தர்களும் முனிவர்களும் இதை மேன்மைப்படுத்தி பல்வேறு வித கோணங்களில் ஆராய்ந்து அதற்கு ஏற்ப தக்க வழிமுறைகளை வகுத்து கொடுத்திருக்கிறார்கள்.

இன்றைய காலத்தில் அறிவியலின் உதவியுடன் தொழில்நுட்ப வளர்ந்து இருக்கிறது. அதனால் தான் புவிக்கு வெளியே இருக்கும் கோள்களையும் நட்சத்திர மண்டலங்களை ஆராய்வதற்கு, வானூர்திகளையும் செயற்கைக்கோள்களையும் புவிக்கு வெளியே எடுத்துச் சென்று வான்வெளி மண்டலத்தை ஆராய்கிறார்கள்.

ஆனால், எந்த ஒர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வசதியும் அல்லாத அந்த காலங்களில், ஜோதிடமானது தோன்றி உலகில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. நாம் வசிக்கும் இந்த பூமிக்கு வெளியே இருக்கும் கோள்களையும் நட்சத்திர மண்டலங்களையும் எந்த ஒரு உபகரணங்களின் உதவி இன்றி அவற்றைப் பற்றிய தெளிவான வரைமுறையோடு அறிந்து குறிப்பிட்டதை, மிகப் பெரிய ஒரு பேரருளாகத்தான் கருத வேண்டும். சாதாரண மனிதக் கண்களால் ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு அப்பால் இருக்கும் பொருள்களை கூட தெளிவாக காண முடிவதில்லை. இருப்பினும், எத்தனையோ கோடி தூரங்களுக்கு தொலைவில் இருக்கும் கோள்களின் நிறங்களின் தன்மைகள் அவை சுற்றி வரும் கால அளவுகளை தெளிவாக குறிப்பிடுவது என்பது ஒரு சாதாரண மனிதனால் முடியாத ஒரு செயலாகும்.

இதில் புவியை மையப்படுத்திய கொள்கை என்று விளக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய தத்துவத்தை பயன்படுத்தி கிரகங்களால் ஏற்படும் தாக்கத்தை கணித்திருக்கிறார்கள். இந்த புவி மையப்படுத்த கொள்கை என்பதை எளிமையாக கூற வேண்டும் என்றால், உதாரணமாக உங்கள் இருப்பிடத்தை கண்டறிய புவியை தான் மையமாக வைத்து கணக்கிடுகிறோம் தவிர வேறு எந்த ஒரு கிரகத்தையோ முதன்மைப்படுத்தி கூறுவதில்லை. அதுபோலவே உன்னைப் பற்றி அறிய வேண்டும் என்றால் நீ இருக்கும் பூமியை மையமாக வைத்து கணக்கீடு செய்வது சரியான முறை ஆகும், என்று ஜோதிடம் விவரிக்கிறது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பூமிக்கு வெளியில் இருக்கும் கருந்துளை பற்றியும் விண்வெளிப்பயணம் பற்றியும் பெரிய அரிய செயலாக கருத்துகளை கூறி ஆராய்ச்சி செய்ய முயற்சிப்பவர்களால், நமது சூரிய குடும்பத்தில் இருக்கும் கிரகங்களால் மனிதனுக்கு ஏற்படும் தாக்கத்தை அறிய இயலவில்லை. ஏனென்றால், "அறிவியல் என்பது மனித அறிவுக்கு எட்டியதே அன்றி அனைத்திற்கும் அடித்தளமாகாது". இருப்பினும், எந்த ஒரு செயற்கைக்கோள்களோ தொலைநோக்கிகளோ இல்லாமல் பூமிக்கு வெளியில் இருக்கும் கிரகங்களையும் நட்சத்திரங்களையும் தெளிவாக அதன் காரகத்துவங்களை விளக்கி அவற்றால் மனிதனுக்கு ஏற்படும் தாக்கத்தை விவரிக்கவே ஒரு கணிதமாக வரைமுறைப்படுத்தி ஜோதிடம் உருவாகியிருக்கிறது. மேலும் இந்த கிரகங்கள் நட்சத்திரங்களால் மனித வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்களை விவரிக்க ஜோதிடம் பயன்படுகிறது

இவ்வாறாக, நியூட்டனின் உலகளாவிய ஈர்ப்பு விதி (விக்கிபேடியா பதிவு - தமிழ் வடிவம்  ஆங்கில வடிவம்) கூறுவது என்னவென்றால், பிரபஞ்சத்தில் இருக்கும் எந்த ஒரு நிறை உடைய இரு பொருள்களுக்கு இடையே இருக்கும் ஈர்ப்பு விசையை பற்றி விவரிக்கிறது. இந்த விதியை ஏற்றுக்கொண்ட அறிவியல் அறிஞர்கள் இந்த ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ள கிரகங்களால் மனிதனுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கூற்றை ஏற்க மறுப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

ஜோதிடத்தில் சூரியனை ஒரு கிரகமாக வைத்து பலன் கூறப்படுகிறது. ஆனால், அறிவியலோ அறிவியல் அறிஞர்களோ சூரியன் ஒரு கிரகம் அல்ல, அது ஒரு நட்சத்திரம் என்று விளக்குகிறது. இவ்வாறு பல விளக்கங்களை தந்தாலும் சூரிய குடும்பத்தில் சூரியனை மையமாக வைத்துக்கொண்டு கூறினால் சூரியனை சுற்றிவரும் அனைத்தும் கோள்களாகவே கூறப்படுகிறது அல்லவா. அதுபோல, உன்னைப் பற்றி அறிய வேண்டும் என்றாலும் இந்த கிரகங்களால் உனக்கு ஏற்படும் தாக்கத்தைப் பற்றி அறிய வேண்டுமென்றாலும், நீ வசிக்கும் பூமியை மையப்படுத்தி அறிய வேண்டும். அவ்வாறு இருக்கையில், பூமியை சுற்றி இருக்கும் அனைத்தும் கிரகங்களாகவே கருத வேண்டும் அல்லவா. அதுவே, சூரியனை கிரகம் என்று கூற காரணம். இதே கருத்தானது சந்திரன் என்ற துணைக்கோளுக்கும் பொருந்தும்.

இவ்வாறு ஜோதிடத்தில் ராகு கேது என்ற மாயகிரகங்கள் இருக்கிறது. அறிவியல் என்ற போர்வையில் இல்லாத ஒன்றை கிரகங்களாக கருத முடியாது என்று ஏற்றுக்கொள்ள மறுக்கும் இவர்களால், கண்களுக்கு புலப்படாத ஊடுகதிர் (x-ray) வை பற்றி விவரிக்கிறார்கள். இது எவ்வாறு கண்களுக்கு புலப்படாதோ, ஆனால் உணர மட்டும் முடியுமோ. அதுபோலவே, ராகு கேது என்று மாயகிரகங்களும் ஆகும். இதுவே, நம் பூமியில் நிகழும் சூரிய சந்திர கிரகணங்களுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதுவே சூரியன் சந்திரனின் வெட்டும் புள்ளிகளாக கணக்கீடு செய்து கூறப்படுகிறது. அதனால், தான் இன்றளவும் சூரியனின் சந்திரனின் கிரகணங்களை தெளிவாக உறுதிப்படுத்தி கூற முடிகிறது. 

மேலும், சனிக்கு அப்பால் உள்ள யுரேனஸ், நெப்டியூன் மற்றும் ப்ளூட்டோ போன்ற கிரகங்கள், ஜோதிடத்தில் ஒரு பொருட்டாக கருதப்படுவதில்லை. ஏனென்றால், இவை சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் கால அளவு, மனித ஆயுளை விட அதிகமாக இருக்கிறது. மற்றும், இது மனிதனின் வாழ்நாளில் பெரும்பாலும் மாற்றங்களை தருவதில்லை அல்லது குறைந்த அளவே தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறலாம். இதை வைத்து அறிவார்ந்த அறிவியல் அறிஞர்களுக்கு சில கேள்விகளும் எழலாம். ஏனென்றால் தொலைவில் இருக்கும் நட்சத்திர மண்டலங்களால் ஏற்படும் தாக்கத்தை விட இந்த சனி என்ற அதற்கு அடுத்துள்ள கிரகங்கள் தாக்கங்கள் அதிகமாக தானே இருக்கும். இதற்கு இவைகள் வான்வெளியில் மண்டலங்களில் நட்சத்திரங்கள் நிலையான இடத்தை பெற்றிருக்கிறது ஆனால் மேலே குறிப்பிட்டது போல மனிதர்களுக்கு பெருமளவில் கருத்தில் கொள்ளக் கூடிய அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்ற கிரகங்களே கணக்கில் கொள்ளப்படுகிறது. என்று அறிந்திருக்கிறோம் அந்த வகையில் பெருமளவு இடப்பெயர்ச்சி அடையாத, சுற்றி வராத கிரகங்களால், கணக்கில் கொள்ளாமல் இருப்பது சரியான காரணமாக உள்ளது. நமது சூரிய குடும்பத்தில் மனித வாழ்நாளில் ஏற்படும் மாற்றங்களையும் தாக்கங்களையும் விவரிக்க கூடிய வல்லமை இந்த 9 கோள்களுக்கு மட்டுமே உள்ளது.

அப்பெயர் பெற்ற இந்த ஜோதிடமானது, மனித வாழ்க்கையில் தாக்கத்தை விவரிக்க பல்வேறு வகையான ஜோதிட முறைகளும் வகைகளும் இருந்தாலும், அதில் பிரதானம் என்னவோ இந்த 27 நட்சத்திர மண்டலங்களை உள்ளடக்கிய, 12 ராசிகளும் 9 நவ கோள்களும் ஆகும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் "அறிவியலால் விளக்க முடியாத இந்த ஜோதிடம் என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு பேரருளே!"...

tags:
ஜோதிடம் என்றால் என்ன? ஜோதிடம் அடிப்படை விளக்கம்? 

Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக