இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

சமையல் எண்ணெயும் ஆரோக்கியமும்

சமையல் எண்ணெயும் ஆரோக்கியமும்
At ஏப்ரல் 08, 2024
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய், தொழிற்சாலைகளில் பெரும்பாலும் இரண்டு விதமான முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது.

1. Mechanical Pressing,
2. Solvent Extraction.

1. Mechanical Pressing : இது பாரம்பரிய முறையோடு ஒத்து இருக்கக்கூடிய எண்ணெயை பிரித்தெடுக்கும் முறை ஆகும்.
இதில் பின்பற்றப்படும் படிநிலைகள்:
 • Preparation,
 • Pressing, 
 • Collection,
 • Filtering and storage.
 • Optional (Cold Pressing)

2. Solvent Extraction : இந்த முறையானது அதிகப்படியான எண்ணெயை பிரித்து எடுக்கும் நோக்கில் பல்வேறு விதமான வேதிப்பொருட்களை பயன்படுத்தப்படும் முறை ஆகும். இதில் பின்பற்றப்படும் படிநிலைகள்:
• Preparation 
• Solvent Bath
• Oil Separation 
• Solvent Removal 

இதில் மேலே குறிப்பிட்டுள்ள, இரண்டாவது முறையான Solvent Extraction - ல் முற்றிலும் மாறுபட்ட முறைகளில் எண்ணெயானது பிரித்து எடுக்கப்படுகிறது. இந்த இரண்டாவது முறையில் உள்ள Preparation என்ற படி நிலையில் மூலப் பொருளானது அதிக வெப்ப நிலையில் சூடு படுத்தப்படுகிறது. இதனால் அதில் இருக்கும் முக்கியமான சத்துக்களும் சேர்ந்து வெளியேற்றப்படுகிறது. Solvent Bath என்ற படி நிலையில் Hexane என்னும் வேதிப்பொருளை பயன்படுத்தி, எண்ணெய் பிரித்தெடுக்கின்றது. இது பெட்ரோலியத்தின் ஒரு வகையான பகுதி பொருள். இது மிகவும் தீங்கிழைக்கக் கூடியது மற்றும் எண்ணெயின் நிறத்தையே மாற்றிவிடும். நிறத்தை மாற்றுவதற்கு பலவகையான வடிகட்டும் முறைகளில் அந்த எண்ணெய் உட்படுத்தப்படுவதால், அந்த எண்ணெயில் இருக்கும் உண்மையான சத்துக்களையும் நீக்கி விடுகிறது. எண்ணெயின் நிறத்தை Bleaching agents போன்ற வேதிப்பொருட்கள் பயன்படுத்தி சுத்தம் செய்கின்றனர். மற்றும் அந்த எண்ணெயின் துர்நாற்றத்தை நீக்குவதற்கு deodorizer போன்ற வேதிப்பொருட்கள் பயன்படுத்துகின்றனர். இந்த அத்துணை வகையான வேதிப்பொருட்கள் மூலம் பிரித்து எடுக்கப்படும் எண்ணெய் ஆனது, முதலில் உணவு பொருளாக இருக்க தகுதியற்றது. இதை பயன்படுத்துவது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது.

அதனால் Solvent extraction முறையில் பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்யை குறைவாக பயன்படுத்த வேண்டும் அல்லது தவிர்த்து, குறைந்த பாதிப்பு தரக்கூடிய Mechanical Pressing முறையில் பிரிச்சு எடுக்கப்பட்ட எண்ணெய்யை பயன்படுத்துவது நன்று. அதை காட்டிலும் பாரம்பரிய முறையில் பிரித்தெடுக்கப்படும் செக்கு எண்ணெய் மிகவும் நல்லது.


Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக