1. அம்மா,
2. அப்பா,
3. தாத்தா,
4. பாட்டி,
5. அம்மாயி,
6. அப்புச்சி,
7. கொள்ளுத் தாத்தா,
8. கொள்ளுப் பாட்டி,
9. மகன்,
10. மகள்,
11. மூத்த மகன்/மகள்,
12. இளைய மகன்/மகள்,
13. பேரன்,
14. பேத்தி,
15. மூத்த பேரன்/பேத்தி,
16. கொள்ளுப் பேரன்/பேத்தி,
17. எள்ளுப் பேரன்/பேத்தி,
18. மாமனார்,
19. மாமியார்,
20. மருமகன்,
21. மருமகள்,
22. கணவன்,
23. மனைவி,
24. மூத்த மருமகன்/மருமகள்,
25. இளைய மருமகன்/மருமகள்,
26. பெரியம்மா,
27. பெரியப்பா,
28. பெரியம்மா பையன்,
29. பெரியம்மா பொண்ணு,
30. பெரியப்பா பையன்,
31. பெரியப்பா பொண்ணு,
32. சித்தி,
33. சித்தப்பா,
34. சித்தி பையன்,
35. சித்தி பொண்ணு,
36. சித்தப்பா பையன்,
37. சித்தப்பா பொண்ணு,
38. அண்ணா,
39. தம்பி,
40. அக்கா,
41. தங்கச்சி,
42. அத்தை,
43. மாமா,
44. அத்தை பொண்ணு,
45. அத்தை பையன்,
46. தாய் மாமன்,
47. முறை மாமன்,
48. மாமா பையன்,
49. மாமா பொண்ணு,
50. தாய் மாமா பையன்,
51. தாய் மாமா பொண்ணு,
52. அண்ணன்,
53. அண்ணி,
54. கொழுந்தனார்,
55. நாத்தனார்,
என்று இப்படியாக வழிவழியாக சொல்லிக் கொண்டே போகலாம்.
இது போன்ற உறவு முறைச் சொற்களெல்லாம் 2050 ஆண்டுகளுக்கு மேல் யாருடைய வாழ்கையிலும் இருக்காது.
யாரும் கூப்பிட பயன்படுத்த மாட்டார்கள்!, அன்றாட வாழ்க்கை அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும்.
காரணம் என்ன !
தனிக்குடித்தனம், வீட்டிற்கு ஒரு பிள்ளை என என்று வந்ததோ, இந்த உறவுகள் எல்லாம் படிப்படியாக மறைய ஆரம்பித்தது.
பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர் வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத் தரவோ எந்த தாய்மாமனும் மாமன் முறை என்றும் ஒன்று இருக்கப்போவது இல்லை!
திருமணத்தின் போது முகூர்த்தக் கால் நட எந்த அண்ணனும் இருக்கப்போவது இல்லை!, மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப் போவது இல்லை,
குழந்தைக்கு மொட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்?
இவ்வாறு சென்றால், காலப்போக்கில் இவையாவும் பெயரளவில் மட்டுமே இருந்து மறைந்துவிடும்.
கட்டிக் கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் எந்த அண்ணன், மாமன் முன்னதாக வந்து நிற்பார்கள்.
தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில், பிறர் வந்தால் செலவு என்றும், உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு சென்றால், ஒரு நாள் விடுப்பு எடுத்தால் ஊதியம் போய்விடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
இனி யார் போவார் வருவார் ?
இதே நிலை தொடர்ந்தால், ஒவ்வொரு குடும்பத்திலும், சொந்தபந்தம் ஏதுமின்றி, ஆறுதலுக்கு ஆள் இன்றி, தவிக்க போகிறார்கள்.
ஒவ்வொரு குடும்பத்திலும் தன் கஷ்டநஷ்டங்களில் பங்கு கொள்ள அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என யாரும் இன்றி அவதிப் பட போகிறார்கள்.
அப்பா, அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை. அந்த ஒரு குழந்தையும் வெளியூருக்கோ தனிக்குடித்தனமோ சென்று விட்டால் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் தனிமையிலே பேச்சுத் துணைக்கு ஆளின்றி வருத்தப்பட வேண்டியது தான்.
எல்லாம் வயதான காலத்தில், ஏன் என்று கேட்க நாதி அற்று முதியோர் இல்லத்திலோ, அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக இருக்க நேரிடும்!...
இந்த நிலை, இந்த தலைமுறை மட்டுமின்றி வருகின்ற தலைமுறைகளிலும் இதே போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்.
உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல், உயர்கல்வி கற்று விட்டோம், உயர்ந்த வேலை என்று பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, அதனோடு கௌரவம் பார்க்க ஆரம்பித்தோமோ அன்றிலிருந்து உறவுமுறைகளின் முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது.
ஒற்றுமைக்கு உதாரணமாக விளங்கிய நம் கலாச்சாரத்தில், பணத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் வெளி ஊர், வெளி நாடு என்று பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறது, இன்றைய தலைமுறை.
இப்படி ஒரு வாழ்க்கையை, பெருமையாக நினைத்து வாழும் மனிதர்களுக்கு, இறுதியில் கிடைப்பதோ இறுதி காலத்தில் துணையாக யாருமில்லாத தனிமையிலே கிடந்து மடிவது ஒன்று மட்டுமே. எந்திரமயமான இந்த வாழ்க்கையை பெருமை, நிறைவு என்று வாழ்ந்து கொண்டு இருக்கும், அனைவருக்கும் இதே நிலைதான்!.
அப்போது, சேர்த்த செல்வங்கள் யாவும் அப்பொழுது வந்து நிற்க போவதில்லை!...
உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அக்கறையாக அருகிலிருந்து கவனித்துக் கொள்ள உறவுகள் வேண்டாமா? ஆனால், ஒரு சில உறவுகள் இருந்தும் இல்லாத நிலைதான் பலரிடத்தில் உள்ளது. அவர்களுக்கும் இதே நிலைதான் என்பதை உணர்வதில்லை.
ஒரே ஒரு முறை உங்கள் கடைசி கால வாழ்க்கையை நினைத்து பாருங்கள்!
அப்பொழுது, பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்ல போவதில்லை. ஆனால், உறவுகள் இல்லாதவர் தான், எத்தனை செல்வங்கள் வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறுக்க முடியாது.
இறுதியாக ஒன்றை நினைவில் வையுங்கள்...
"ஊர் கூடிதான் தேர் இழுக்க முடியும், ஒன்று கூடிதான் வாழ முடியும்!"...
இதை உங்களது உற்றார் உறவினர்களுக்கு அனுப்பி உறவுமுறைகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துங்கள்.
பொதுநலனில் அக்கறையுடன் அறத்திணை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக