நம் உடலில் தலையே பிரதானம், நம் அன்றாட செயல்பாடுகள் எல்லாம், நம் மூளையிலிருந்தே பிறப்பிக்கப்படுகிறது. நம் சிந்தனைகளும் செயல்களும் மற்றும் சீரான உடல் செயல்பாடுகளும் மூளையே தீர்மானிக்கிறது. எத்தனை எத்தனை இயந்திரங்கள் வந்தாலும் மூளையின் செயல்பாடு என்பது அதற்கும் மேலான ஒன்று.
அப்படிபட்ட, மூளையில் ஏற்படும் சில விரும்பத்தகாத மாற்றங்கள், நம் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது; என்று வியப்பாக உள்ளதல்லவா?...
அத்தகைய சில விரும்பத்தகாத மாற்றங்களுள் ஒன்று, மூளை மூடுபனி (Brain Fog). இது மூளையின் செயல்பாடுகளில் ஏற்படும் சோர்வு என்று கருதப்படுகிறது.
இது உங்கள் சிந்தனை, நினைவாற்றல் மற்றும் கனவம் ஆகியவற்றை பாதிக்கும் அறிகுறிகளின் தொகுப்பை என்று அறியப்படுகிறது. இது போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் தங்களின் அன்றாட செயல்பாடுகளில் தடுமாற்றம் மற்றும் மனதில் ஒரு தெளிவின்மையை உணர்வதாக தெரிவிக்கின்றனர்.
இதனை பின்வரும் அறிகுறிகள் மூலம் இருப்பதாக கருதப்படுகிறது:
✤ தூக்கமின்மை,
✤ மன அழுத்தம்,
✤ மனக் கவலை,
✤ சில மருத்துவ காரணங்கள்,
✤ மருத்துவ பக்கவிளைவுகள்,
✤ குறை தைராய்டு (hypothyroidism),
✤ உடல் சோர்வு,
✤ நீர் சத்து பற்றாக்குறை,
✤ ஊட்டச்சத்து குறைபாடுகள்,
✤ ஊக்கிகள் (Hormones) சமநிலையின்மை,
✤ வாழ்க்கை முறை,
என இன்னும் பிற அறிகுறிகள் உள்ளது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால்,
✤ நாம் நினைத்ததை கூற முடியாமல் தவிப்பது.
✤ பேசுவதில் தடுமாற்றம்,
✤ அடுத்து என்ன செய்ய வேண்டும், என்ற சிந்தனை ஓட்டத்திலிருந்து தவறுவது.
✤ நமக்கு தெரிந்த முகங்களை மறப்பது மற்றும் தெரிந்த நபர்களின் பெயர்களை மறப்பது.
✤ மனக்குழப்பம் மற்றும் சரியான முடிவு எது என்று தெரியாமல் தடுமாறுவது.
✤ தாமதமாக சிந்தித்து பதில் கூறுவது.
இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவை இருந்தாலும், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இதனை உறுதிப்படுத்த முடியும்.
மருத்துவத்தில் பல ஆய்வுகளின் அடிப்படையில், தலையில் ஏற்பட்ட காயங்களாலும் மற்றும் வயதாவதால் வரக்கூடும் எனக் கூறப்படுகிறது. இது உங்களுக்கு இருப்பதாக தெரிய வந்தால், உடனடியாக மருத்துவரை சென்று ஆலோசனை பெற வேண்டும். மேலும், இதற்கு நிலையான ஒரு மருத்துவ சிகிச்சை முறை இல்லை. பக்கவிளைவுகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த அறிகுறிகளை சரி செய்து கொள்வதற்கு; பின்வரும் செயல்பாடுகளை பின்பற்ற வேண்டும் என ஆய்வறிக்கைகள் கூறுகிறது.
❂ போதிய அளவு தூக்கம்,
❂ மன இருக்கம், மனக் கவலை மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்,
❂ சுகாதாரமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்,
❂ போதிய உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சியை செய்ய வேண்டும்,
❂ உடலில் நீர் பற்றாக்குறைக்க போதிய நீர் பருக வேண்டும்.
உடல் அளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருந்தால், இதனை சரி செய்யலாம்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக