இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

காக்கைக்கு வைத்த படையலை, பூனை சாப்பிடுவது போல...

காக்கைக்கு வைத்த படையலை, பூனை சாப்பிடுவது போல...
At ஜூலை 20, 2024
சிறுகதை 
புதுமொழி : காக்கைக்கு வைத்த படையலை, பூனை சாப்பிடுவது போல.,

நான் வசிக்கும் வீட்டிற்கு அருகில் குடியிருக்கும், ஒரு வயதான மூதாட்டி தினமும் காலையில் காக்கைக்கு படையல் உணவு வைப்பது வழக்கம். இந்த உணவை தினமும் காகங்களும் சாப்பிட்டு செல்லும். இதை நோட்டமிட்ட பூனை ஒன்று, தற்செயலாக அங்கே வந்து, அந்த சுவற்றில் மேல் இருக்கும் படையல் உணவை உண்டு சென்றது. 

இவ்வாறு பல நாட்கள் இருந்த நிலையில், ஒரு நாள் இதை பார்த்த அந்த மூதாட்டி, அந்தப் பூனையை விரட்டினார்கள். அதுவும் பயந்து ஒதுங்கியது என, அந்த மூதாட்டி சென்றபின், மீண்டும் அந்த உணவை சாப்பிட்டு சென்றது. அங்கே தினமும் வந்த காக்கை, படையல் உணவு இல்லாததை பார்த்து ஏமாந்து சென்றது. 

இதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், மற்றொருபுறம் சிந்திக்க கூடியதாகவும் இருக்கிறது. இதில் பூனைக்கு உணவு கிடைத்தது, காக்கைக்கு ஏமாற்றம் கிடைத்தது. 
அது போல தான், நம் வாழ்க்கையில் எளிதாக கிடைக்கும் ஒன்றை நம்பி இருந்தால், அது கிடைக்காத போது ஏமாற்றம் தான் மிஞ்சும்… 

இதில் காக்கைக்கு பசியாற்ற விரும்பி வைத்த படையல் ஆனது, பூனையின் பசியை ஆற்றியது. அதேபோல், நாம் செய்யும் செயலின் பலன்கள், அதற்கு மாறாக அமைவதும் இயல்புதான்…


Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக