இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

மேசம் இராசி

மேசம் இராசி
At ஜூலை 30, 2024

இராசி மண்டலங்களில் முதலாவது ராசி மண்டலம், மேஷ இராசி ஆகும். இது கால புருஷ தத்துவப்படி, தலையை குறிக்கும். இது முதல் சர இராசி மற்றும் ரஜோ குணம் கொண்ட இராசியாகும். இது அஸ்வினி நான்கு பாதங்கள், பரணி நான்கு பாதங்கள், மற்றும் கார்த்திகை ஒரு பாதம் ஆகிய 9 நட்சத்திர பாதங்களைக் கொண்ட இராசியாகும். இந்த இராசியின் அதிபதி மற்றும் ஆட்சி பெறக்கூடிய நவகிரகம் செவ்வாய் பகவான் ஆவார். இந்த இராசியில் உச்சமடைய கூடிய கிரகம் சூரிய பகவான் ஆவார். நீசம் அடையக்கூடிய கிரகம் சனி பகவான் ஆவார்.

உடலமைப்பு:

மேஷ இராசியில் பிறந்தவர்கள், பொதுவாக நடுத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும் உடையவர்கள். அழகான பல்வரிசை கொண்ட முகமைப்பை உடையவர்கள். இந்த இராசியில் சூரியன் உச்சம் அடைவதால், பொதுவாக உடல் சூடு அதிகமாக இருக்கும் மற்றும் சனி நீசம் அடைவதால் இளமையில் இருக்கும் தலைமுடியானது வயதான காலத்தில் குறைவாக அல்லது இல்லாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

குண அமைப்பு:

இவர்கள் வெகுளித்தனம் போல காணப்பட்டாலும், எந்த ஒரு செயலையும் கவனித்து செயல்படும் ஆற்றல் படைத்தவர்கள். பொதுவாக இவர்களுக்கு தீர்க்காயுள் தெய்வ பக்தி மற்றும் இரக்க குணம் உடையவர்கள். இவர்களுக்கு தன, குடும்ப, வாக்கு ஸ்தானமாகிய ரிஷபம் இரண்டாவது விடாக வருவதால், இவர்கள் நன்றாக பழகி பேசக்கூடிய நபர்களாக இருப்பார்கள். இவர்கள் பொதுவாக தாய் பாசத்திற்கு ஏங்க கூடியவர்கள். மேலும் காரியத்தில் கண்ணாக செயல்படுபவர்கள்.

மணவாழ்க்கை:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்கு பின்பு தான், நல்லதொரு குடும்ப நிலை முன்னேற்றமும், நல்லதொரு வருமான வாய்ப்பும் ஏற்படும். மேலும் திருமண வாழ்வில் சிறு சிறு பிரச்சனைகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்படும்.

இவர்களுக்கு பதினோராவது இராசி மண்டலம் பாதக ஸ்தானமாக வருவதால், கும்ப இராசி நபரை திருமணம் செய்து கொள்ளக் கூடாது. இவர்களின் வாழ்க்கையில் ஒரு பின்னேற்றத்திற்கு பின்பு தான் திடீரென ஒரு முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் தங்களது திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ப உயரத்தை அடைந்த பின்பு, அவர்களுக்கு பாதகங்கள் நிகழ வாய்ப்பு உண்டு. அவை பேராசையினாலோ ஏற்பட வாய்ப்பு உண்டு.

சாதகம் அளிப்பவை:

நிறம்: அடர் சிவப்பு.

கிழமை: செவ்வாய்.

அதிர்ஷ்ட இரத்தினக்கல்: பவளம்.

திசை: தெற்கு.

தெய்வம்: முருகன்.


Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக