இது இராசி மண்டலங்களில் இரண்டாவது ராசியாகும். கால புருஷத் தத்துவப்படி, இது முகத்தை குறிக்கும் இராசியாகும். இந்த ராசியில் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். இதன் இயக்கம் ஸ்திர தன்மை ஆகும். குருவுக்கு அடுத்தபடியாக முழு சுபராக சுக்கிரன் உள்ளது. இது பெண் இராசி ஆகும். நில தத்துவம் உடையது.
உடலமைப்பு:
ரிஷப இராசியில் பிறந்தவர்களின் உடல் அமைப்பு ஆனது, அழகிய தோற்றத்தையும் அனைவரையும் வசீகரப் படுத்தக் கூடிய அளவிற்கு இருக்கும். இவர்கள் நடுத்தர உயரம் உடையவர்கள் மற்றும் கம்பீரமான தோற்றம் காணப்படும். நீண்ட கழுத்தும் அகன்ற மார்பும், அழகான அங்க அமைப்புகள் உடைய தோள்களும் உடன் காணப்படுவார்கள். இவர்களுக்கு கண்கள் தனித்துவமாக தெரியும். பல் வரிசைகள் அழகாக அமையப் பெற்றிருக்கும். குட்டையான முக்கு அமைப்பு மற்றும் அழகான அடர்ந்த முடியும் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் நீண்ட ஆயுள், புகழ் கௌரவம் மற்றும் அந்தஸ்து உடன் வாழ்வார்கள்.
குண அமைப்பு:
ரிஷப இராசிக்காரர்கள் சாமர்த்தியமாகவும் வேடிக்கையாகவும், சாதுரியமாகவும் கவர்ச்சியாகவும் பேசும் ஆற்றல் உடையவர்கள். ஆதலால், இவர்கள் சொல்லுக்கு சூத்திரதாரி என்று அழைக்கப்படுகிறார்கள். புதிய நபர்களுடன் உடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள சற்று தயக்கம் காட்டுவார்கள். பிறர் தம் பேச்சை வெல்வதற்கு இடம் தர மாட்டார்கள். பேச்சில் தனக்கென ஒரு தனி பாணியை வைத்திருப்பார்கள். இவர்கள் நல்ல ஞாபக சக்தி கொண்டவர்கள். தற்பெருமையும் புகழ்ச்சிக்கும் ஒரு சிலர் ஆசைப்படாதவர்கள். இவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றுபவர்களாக இருப்பார்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்டவர்கள். பார்ப்பதற்காக சாதாரண மனிதர்களாக தென்பட்டாலும் இவர்களுக்கு எதிராக செயல்படுபவர்களை தங்களது சாதுரியத்தால் விரட்டியடிப்பார்கள். சாதமிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கு இவர்களுக்கு பொருந்தும். ஆடம்பரமான வாழ்க்கை இல்லை என்றாலும், தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் விருப்பம் உடையவர்கள். இவர்களுக்கு வெண்மை நிறம் மிகவும் பிடிக்கும். எந்த ஒரு கஷ்டத்தையும் சுமையையும் தாங்கும் சக்தி உடைய சகிப்புத்தன்மை இருக்கும்.
பொருளாதார நிலை:
இந்த ரிஷப ராசிக்காரர்கள் தங்களுக்கு ஏற்ற இறக்கமான வருமானம் இருக்கும். இவர்கள் தங்கள் பேச்சின் மூலம் வருமானம் ஈட்டக் கூடிய அமைப்பு இருக்கும். ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஊதியம் பெறுதல், ஒப்பந்தங்கள், ஒப்பந்ததாரராக பணி செய்யும் அமைப்பு, இவர்களுக்கு திடீரென்று தன வரவு இருக்கும். ஒரு சில காலங்களில் நிதி வரவில்லாமல் கஷ்டப்பட்டாலும், வயதிற்கு ஏற்ப வளரும் பொழுது வருமானம் இவர்களுக்கு பெருகும். இவர்களுக்கு உள்நாடு மற்றும் உள்ளூரில் வேலை என்பது சிறப்பாக இருக்கும். இவர்கள் விரயத்தையும் லாபகரமானதாக மாற்றும் ஆற்றல் உள்ளவர்கள்.
தொழில்:
ரிஷப இராசிக்காரர்கள், ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழில் மற்றும் வேலைகள் மேற்கொள்ளும் பொழுது சிறப்பாக இருக்கும். இவர்களுக்கு நிரந்தர தொழில் அல்லது ஒரே இடத்தில் பணி செய்வது சரியாக இருக்காது. இவர்களுக்கு பெரும்பாலும் இரட்டை வருமானம் அமைப்பு இருக்கும். இவர்களுக்கு கலைத்துறை, இசைத்துறை போன்றவற்றில் ஆர்வம் இருக்கும். நவீன தொழில்களில் லாபம் கிடைக்கும். பத்திரிக்கை மற்றும் எழுத்து துறைகளில் இவர்கள் சிறந்து விளங்க முடியும். எந்த துறையிலும் எந்த ஒரு பொறுப்பையும் சுமக்கும் தன்மை இவர்களுக்கு இருக்கும். அதனால், நிறுவனங்களில் மேலாளர் போன்ற உயர் பதிவிகள் சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் இருக்கக்கூடும். அழகுப் பொருட்கள் சார்ந்த தொழில்களான, துணிக்கடை நகைக்கடை, உணவு சம்பந்தப்பட்ட தொழில்களான, உணவகங்கள், தேநீர் விடுதிகள் போன்றவை அமைத்து பணி செய்யும் அமைப்பு இவர்களுக்கு உள்ளது. பூமி, மனை சார்ந்த வருமான வாய்ப்புகள் உள்ளது. கூட்டாளிகளை நம்பி தொழில் மற்றும் வேலைகளை கவனமுடன் செயலாற்ற வேண்டும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை:
நிறம்: வெண்மை, நீலம்.
திசை: தென்கிழக்கு.
கிழமை: வெள்ளி, சனி. அதிர்ஷ்ட இரத்தினக்கல்: வைரம்.
தெய்வம்: விஷ்ணு, லட்சுமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக