இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

நிலம் அல்லது சொத்து வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை

நிலம் அல்லது சொத்து வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை
At அக்டோபர் 11, 2024
நிலம் அல்லது இடம் சொத்து வாங்குவதற்கு முன் மற்றும் பத்திர பதிவு செய்வதற்கு முன் பின்பற்ற விட வேண்டிய வழிமுறைகள்: 

வாங்கக்கூடிய இடம் அல்லது சொத்தின் முழு நிலை விவரங்கள் அறிந்தபின் பத்திரப்பதிவை மேற்கொள்ள வேண்டும்.

1. நிலத்தின் வகையை அறிய வேண்டும். அவை, குடியிருப்பு நிலம்(Residential Type), வணிக பயன்பாட்டு நிலம்(Commercial Type) அல்லது புறம்போக்கு நிலம்(Government Land) ஆக இருக்கலாம்.

2. நிலத்தின் வகை அறிந்தபின், அவை அங்கீகரிக்கப்பட்ட நிலமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், அங்கீகரிக்கப்பட்ட நிலத்திற்கு சரியாக வரையறுக்கப்பட்ட எல்லைகள், பொது பாதை, நிலத்தை விற்பவர் அரசுக்கு தானமாக கொடுத்த நிலப்பகுதியையும் குறிக்கும். ஆனால், அங்கீகரிக்கப்படாத நிலத்திற்கு சரியாக வரையறுக்கப்படாத எல்லைகள் மற்றும் பாதை இல்லாத சூழ்நிலையில் இருக்கக்கூடும். இதனால், நிலத்தை திரும்ப இழக்க நேரிடும்.

3. தலைப்பு பத்திரங்கள்(Title Deeds): இது நிலம் விற்பவர் கொடுக்கக்கூடிய ஆவணங்கள் மற்றும் பத்திரங்கள் அடங்கும். அதாவது, தாய் பத்திரம் அல்லது மூல பத்திரம், நிலத்திற்கு செலுத்தி வந்த வரி வகைகள், இந்த நிலத்திற்கு தொடர்புடைய உரிமையாளர்களின் விபரங்களும் வரலாறும் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் ஆகியவை.

4. நிலத்திற்கான வில்லங்க சான்றுகள் மற்றும் அவற்றை தலைப்பு பத்திரங்களுடன் ஒப்பிட்டு, அனைத்து விவரங்கள் சரி பார்க்க வேண்டும். அந்த வில்லங்கச் சான்று விவரங்கள் ஆனது பதிவு துறையிடம் இருந்து முறையாக பெற்ற அதிகாரப்பூர்வ ஆவணமாக இருக்க வேண்டும்.

5. நிலத்திற்கு வருவாய்த் துறையின் சார்பாக அளிக்கப்படும் ஆவணங்களான, பட்டா சிட்டா மற்றும் அடங்கல், இவற்றை நிலத்தின் ஆவணங்களுடன் சரிபார்க்க வேண்டும். அவை கூட்டுப் பட்டா அல்லது தனி பட்டா என எந்த வகையில் உள்ளது என அறிந்து கொள்ள வேண்டும்.

6. நிலத்திற்காக ஏதேனும் அதிகாரங்களை(Power of Attorney) பிற நபர்களுக்கு வழங்கி உள்ளார்களாக என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில், அது நடைமுறையில் உள்ளதா? அல்லது காலாவதியாகி விட்டதா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

7. நிலத்திற்கான அனைத்து விதமான ஆவணங்களையும் அதன் அசல் மற்றும் மூல ஆவணங்களையும் சரி பார்க்க வேண்டும். தாய் பத்திரத்திற்கான அசல் மற்றும மூல ஆவணங்களையும் பார்க்க வேண்டும். ஏனெனில், அந்த ஆவணங்களை அடமானமாகவோ கடனுக்காகவோ வைக்கப்பட்டிருக்கலாம்.

8. நிலத்தை விற்பவர், உண்மையில் நிலத்தின் உடமையாளராக(Possession of Land) உள்ளவரா? என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவை வங்கிகள் மூலமாகவோ அல்லது பிற தனியார் நிதி நிறுவனங்கள் மூலமாகவோ கையகப்படுத்தப்பட்டு இருக்கலாம்.

9. இந்த ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின். ஆவணங்களில் குறிப்பிட்ட விவரங்களின்படி நிலத்தின் அமைப்பிடம் இருப்பதை நேரடியாக கல ஆய்வு செய்து, உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

10. வாங்கப்படும் நிலத்தின் மீது, ஏதேனும் நீதிமன்ற வழக்கு பதியப்பட்டுள்ளதா? அல்லது வழக்கு நிலுவையில் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு வழக்கு ஏதும் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி இருக்கும் பட்சத்தில், அது தீர்வு காணப்பட்டுள்ளதா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

11. வாங்கப்படும் நிலத்திற்கு சட்டரீதியாக வாரிசுகள் யாரேனும் உள்ளார்களா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அவர்கள் குழந்தைகள் எனில்; அவர்கள் சார்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் கையொப்பம் இட வேண்டும். அவர்கள் பெரியவர்களாக இருந்தால், அவர்களும் கையொப்பம் இட வேண்டும்.

12. பிறகு, பதிவு செய்வதற்கு முன்பே, அந்த நிலப்பகுதிக்கு உட்பட்ட தாசில்தார் மற்றும் பதிவுத்துறை ஆகிய அலுவலகங்களில் இருந்து ஆட்சேபனை இல்லை என்ற No Objection Certificate யை பெற்றுக் கொள்ள வேண்டும்.

13. இவை அனைத்தையும் ஆவணங்களையும் வைத்து நம்பகத்தன்மை வாய்ந்த வழக்குரைஞரிடம் இருந்து சட்டக் கருத்து (Legal Opinion) பெற வேண்டும்.
 
14. இதனை பிறருக்கு தெரியப்படுத்தும் விதமாக, செய்தித்தாள்களில் இந்த நிலத்தை பதிவு செய்வதற்கு முன், இந்த பத்திரப்பதிவு குறித்த ஆட்சேபனை அல்லது எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில், இந்த குறிப்பிட்ட கால அளவுக்குள் தெரிவிக்க வேண்டும் படி, விளம்பரம் செய்ய வேண்டும்.

15. அந்த விளம்பரத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு, பத்திரப்பதிவு செய்ய ஆயத்தமாக வேண்டும். அப்பொழுது நல்ல தரமான இரு சாட்சிகளை உடன் அழைத்து பத்திர பதிவு செய்ய வேண்டும்.

16. இதில் எந்த ஒரு ஆவணங்களிலிலும் எழுத்துப்பிழைகள், ஏதேனும் முரண்பாடுகள், முக்கியமான விடுபட்ட தகவல்கள் உள்ளதா? என சரிபார்க்க வேண்டும்.

17. மேற்குறிப்பிட்ட அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், இடத்தை பத்திரப்பதிவு செய்ய வேண்டும்.

18. பத்திரப்பதிவு முடிந்த பின்பு, உடனடியாக அந்த நிலம் தொடர்பான பிற ஆவணங்களை உங்கள் பெயருக்கு மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, பட்டா சிட்டா அடங்கல் (EC) மற்றும் வருவாய் துறை ஆவணங்கள் (Revenue Records) முதலியன. இந்த துணை ஆவணங்களும் மிகவும் முக்கியமானது.

19. அந்த இடத்தில் பிற்காலத்தில் ஆக்கிரமிப்புகளை தவிர்ப்பதற்கு, அந்த இடத்தை சுற்றி தரமான உறுதியான எல்லைகள் மற்றும் கம்பி வேலிகள் அமைத்துக் கொள்ள வேண்டும். மற்றும் குறிப்பிட கால இடைவெளிகளில், அந்த இடத்தினை ஒழுங்காக பார்வையிட்டு, மேற்பார்வை செய்து, பராமரிப்பு செய்ய வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அந்த சொத்து அல்லது இடம் பிற்காலத்தில் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு, பாதுகாப்பாக இருக்கும்.

Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக