இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

குடிநீரும் நம் உடல் நலமும்

குடிநீரும் நம் உடல் நலமும்
At அக்டோபர் 19, 2024
நம் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் குடிநீரின் தேவையானது மிகவும் முக்கியமானது. அவ்வாறு நம் வீடுகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரானது, அதன் தரத்தினை பொறுத்தும் அதில் மறைந்திருக்கும் பொருட்களை பொறுத்தும், நம் உடல் நலத்தில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி இதன் மூலம் அறியலாம். 

நம் உடல் நலம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அவற்றுள் முதன்மையான காரணம் உணவுப் பொருட்களின் வழியே. அவ்வாறு நாம் உணவிற்காக பயன்படுத்தும் குடிநீரில் இருக்கும் மாசுக்களும் தேவையற்ற தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களும், உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

❁ நம் நீர் பயன்பாடு:
19 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பு மக்கள் அவரவர் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு அருகில் இருக்கும் நீர் நிலைகளை பயன்படுத்தினார் மற்றும் பிற உயிரினங்களும் அந்த நீரினை பயன்படுத்தின. ஆனால் அப்பொழுது இருந்த மக்கள் தொகையும் குறைவு மற்றும் மக்களுக்கிடையேயான இடைவெளியும் அதிகம்.

தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் விளைவாக பெரும்பான்மையான மக்கள் ஒரு குறிப்பிட்ட குறுகிய நிலப்பகுதிக்குள் வாழ ஆயத்தமானதன் விளைவாகவே, இந்த குடிநீரானது குழாய்கள் மூலமாக வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட துவங்கியது.

நீர் ஆதாரங்களை பாதுகாக்கவும் பெரும்பான்மையான மக்களுக்கான நீர் தேவைகளை விரைவாகவும், உடனடியாக நீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, இந்த நீரானது குழாய்கள் மூலம் வழங்கப்பட துவங்கியது.

இவ்வாறு நீரானது குழாய்கள் வழியாக விநியோகிப்பதால், மக்களும் நீரானது தரமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

பல காரணிகளால் நீர் ஆதாரங்களில் ஏற்படும் மாசுபாடு காரணமாக, குடிக்க தகுதியற்ற மற்றும் பயன்படுத்த தகுதியற்ற நீர் ஆதாரங்களினால் ஏற்படும் நோய்கள் மற்றும் உடல் நல பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கவும் குழாய்கள் மூலம் பல வழிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரானது, விநியோகிக்கப்பட துவங்கியது.

இந்த காலகட்டத்தில் நவீனமயமாக்கல், நகரமயமாக்கல் விளைவுகளால், ஒவ்வொரு வீட்டின் நீரின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மற்றும் சுகாதாரத்திற்காக அந்தந்த பகுதிகளில் அரசாங்கம் மக்களுக்கு குடிநீரை வழங்கி வருகிறது. அதை தவிர்த்து பிற தனியார் நிறுவனங்களும், இந்த சேவையை செய்கின்றனர். அவ்வாறு வழங்கப்படும் குடிநீரில் அதன் தரமும் தூய்மையையும் பராமரிக்க வேண்டியது, அவர்களின் பொறுப்பாக உள்ளது. இருப்பினும் இதில் ஏற்படும் ஒரு சில குறைபாடுகளும் மற்றும் பிற புற காரணிகளும், அந்த குடிநீரை மாசுபடுத்தி விடுகின்றன. இதை அறியாமல் பயன்படுத்தும் ஒவ்வொருவரும், அதன் தாக்கத்திற்கு உட்பட வேண்டி இருக்கிறது.

நாம் இன்றளவில் பயன்படுத்தும் குடிநீரானது, பெருமளவில் குளோரினேற்றம் செய்யப்பட்ட, ஃபுளோரினேற்றம் செய்யப்பட்ட, கன உலோகங்கள் கலக்கப்பட்ட, ஒரு மாசுபட்ட குடிநீரை தான் பயன்படுத்துகிறோம், என்பது ஒரு சிலர் அறிந்ததே… இதனால் ஏற்படும் விளைவுகள், கண்டறியும் பரிசோதனை முறைகள் பின்வருமாறு,

❁ குடிநீரில் கலந்திருக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள்:
✤ நுண்ணுயிரிகள்: 
அவை பெரும்பாலும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பாராசைட்டுகள் கலந்திருக்க கூடும்.

✤ வேதிப்பொருட்கள்:
அவை பெரும்பாலும் பூச்சிக்கொல்லிகள், விவசாய உரங்கள், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கலந்திருக்க கூடும்.

✤ உலோகங்கள்: 
பெரும்பாலும் எளிதில் நீரில் கலக்கக்கூடிய உலோகங்களான ஈயம்(Led), தாமிரம்(Copper), ஆர்சனிக்(Arsenic) மற்றும் பிற கன உலோகங்கள். இதுபோன்ற கன உலோகங்கள், ஒப்பீட்டு அளவில் அதிக அடர்த்தியும் அதிக அணு எடையும் அல்லது அதிக அணு எண் உடையது.

✤ கிருமி நாசினிகள்
தீங்கு விளைவிக்கக்கூடிய தொற்று கிருமிகளை அழிக்கக்கூடிய அல்லது கட்டுப்படுத்தக்கூடிய வேதி பொருட்களான குளோரின் மற்றும் ஃப்ளோரைடு ஆகியவை குறிப்பிட்ட அளவை காட்டிலும் நீரில் மிகுந்து காணப்படுவது.

✤ ஆவியாகும் அல்லது நிலைப்பு தன்மையற்ற கரிம சேர்மங்கள்(VOC):
இவை எளிதில் ஆவியாகக் கூடியவை. வண்ணப்பூச்சுகள், கரைப்பான்கள் மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளில் காணப்படுகின்றன. இவைகள் நீரில் கலப்பதால் தலைவலி, குமட்டல் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. 

✤ மருத்துவக் கழிவுகள்: நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீர் விநியோக நிலையங்களில் இருக்கும் மருந்துகள் மற்றும் சுகாதாரம் இல்லாமல் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளால் மாசுபடும் நீர் ஆதாரங்கள் மாசடைகிறது. மேலும், நீர்வாழ் உயிரினங்களை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த நீரினை பயன்படுத்தும் மனிதர்களுக்கு பல்வேறு விதமான நோய் தொற்றுகளை ஏற்ப்படுத்தும் மற்றும் உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இந்த மாசுபட்ட நீரானது முறையாக சுத்தம் செய்யப்படாமல் இருந்தால், அவை பயன்படுத்தும் பொழுது நமக்கு பல்வேறு தீங்கு விளைவிக்கும்.

❁ எவ்வாறு இந்த தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் நீரில் கலக்கின்றது?
✤ நுண்ணுயிரிகள் ஆனது, மாசடைந்த நீர் ஆதாரங்கள் மூலமும் தொற்று நோய் பரவக்கூடிய கழிவுகள் மூலமும் இவை நீரில் கலக்கிறது.

✤ வேதிப்பொருட்கள் ஆனது, தொழிற்சாலை வெளியேற்றங்கள் மூலமாகவும் விவசாய கழிவுகள் மூலமாகவும், வீட்டு உபயோக கழிவுகளாலும் மருத்துவ கழிவுகளாலும், மற்றும் இயற்கையில் இருக்கும் நிலத்தடி வேதிப்பொருட்களால் நீரில் கலக்கிறது.

❁ இந்தத் தீங்கு விளைவுகள் கூடிய பொருட்களால் ஏற்படும் குறுகிய மற்றும் நீண்ட கால விளைவுகள்:
✤ நுண்ணுயிரிகள்: 
இவை கலந்திருக்கும் நீரினை பயன்படுத்தும் பொழுது, நீர் மூலம் பரவும் நோய்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. அவை வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தசைப்பிடிப்புகளை போன்ற உடனடி மற்றும் குறுகிய கால விளைவுகளை ஏற்படுகிறது.

✤ வேதிப்பொருட்கள்: 
இவை கலந்திருக்கும் நீரினை பயன்படுத்தும் பொழுது, அவை சிறு சிறு உடல் நலம் பாதிப்புகளை ஏற்படுத்தும். அவ்வாறு நீண்ட காலத்திற்கு பயன்படுத்தும் பொழுது, அவை உடல் நல குறைபாட்டை ஏற்படுத்தும். மேலும், குறிப்பிடத்தக்க வகையில் இரைப்பை, கல்லீரல், குடல் மற்றும் நரம்பு மண்டலங்களை பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இவை உரிய காலத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், புற்றுநோயாக மாற வாய்ப்பு உள்ளது.

✤ குறுகிய கால விளைவுகள்: உடனடியாக அல்லது சில நாட்களுக்குள் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறிப்பாக வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, ஆகியன. தலைவலி மற்றும் தலைச்சுற்றல், தோல் எரிச்சல் போன்றவை ஏற்படுத்தும். 

✤ நீண்ட கால விளைவுகள்: 
பல ஆண்டுகள் அல்லது தொடர்ச்சியாக இந்த நீரினை பயன்படுத்தும் போது, புற்றுநோய், நரம்பியல் கோளாறுகள், குழந்தையின்மை, சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்றவைகளை ஏற்படுத்தக் கூடும்.

❁ குறிப்பிடத்தக்க வேதிப்பொருட்கள் ஏற்படும் தாக்கங்கள்:
✤ ஈயம்(Lead): மூளை பாதிப்பு, கற்றல் குறைபாடுகள் மற்றும் குழந்தைகளின் நடத்தை சிக்கல்கள் ஏற்படுத்தலாம். 

✤ பாதரசம்(Mercury): நரம்பு மண்டலம், சிறுநீரகங்கள் மற்றும் குழந்தையின்மை பாதிப்பு ஏற்படுத்தலாம். 

✤ ஆர்சனிக்(Arsenic): புற்றுநோய், தோல் புண்கள் மற்றும் இருதய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். 

❁ நீரில் கலந்து இருக்கும் வேதிப்பொருட்கள் கண்டறியும் பரிசோதனை முறைகள்:
✤ வேதியியல் சோதனைகள்:
pH சோதனை: நீரின் அமிலத்தன்மை அல்லது காரத்தன்மை அளவிடப் பயன்படும் முறை. 
கடினத்தன்மை சோதனை(Hardness test): கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகளின் செறிவை அளவிடும் முறை. 
கடத்தும் திறன் சோதனை(Conductivity test): நீரின் மின்சாரம் கடத்துத்திறனை அளவிடும் முறை, இது கரைந்த தாதுக்கள் மற்றும் உப்புகளின் இருப்பைக் குறிக்கும். 
வண்ண அளவீட்டு சோதனைகள்(Colorimetric tests): குளோரின், ஃபுளோரைடு மற்றும் ஈயம் போன்ற குறிப்பிட்ட உலோகங்கள் இருப்பதைக் கண்டறியும் முறை. இது வண்ண மாற்றங்களை உருவாக்கும் வேதியியல் பொருட்கள் நீரில் சேர்ப்பதன் மூலம் எதிர்வினைகளை உருவாக்கி கண்டறிய உதவுகிறது. 
ஸ்பெக்ட்ரோ ஃபோட்டோ மெட்ரி பரிசோதனை: பல்வேறு விதமான அசுத்தங்களை கண்டறிய, நீர் மாதிரிகளின், ஒளி ஊடுருவும் தன்மையை வைத்து அறிய பயன்படுகிறது.

✤ வெளிப்படையான பரிசோதனை:
தெளிவின்மை பரிசோதனை: கலங்கிய நீரின் அடர்த்தியை அளவிடுவதன் மூலம், அதில் மாசு இருப்பதை குறிக்கிறது. 
வாசனை பரிசோதனை: நீரின் வாசனையை வைத்து, அவை இயல்புக்கு மாறாக தெரிந்தால், அதில் மாசு இருப்பதை அறியலாம். 
சுவை பரிசோதனை: பல்வேறு அசுத்தங்களால் பாதிக்கப்படக்கூடிய, தண்ணீரின் சுவையை வைத்து அறியலாம். 

குறிப்பிடத்தக்க மாசுபாடு அல்லது கலப்பட வகைகளை அறிவதற்கான பரிசோதனை கருவிகள் அல்லது முறைகள் பயன்படுத்தி, மாசு அல்லது கலப்படம் இருப்பதை கண்டறியலாம்.

தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஏற்ப, அனுமதிக்கப்பட்ட மாசுபாடு அல்லது கலப்பட விகிதம் அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், அவற்றை நீண்ட காலங்களுக்கு அல்லது குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக பயன்படுத்தும் பொழுது, மேற்குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்த கூடும். எனவே, இந்த வகை குடிநீரினை கவனமுடன் பயன்படுத்த வேண்டும், என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக