இவ்வாறு இருக்கையில், நம் வேண்டுதல்களும் கோரிக்கைகளும் நம் மனதில் இருந்து அறியும் தெய்வம்; நம் மனதில் இருக்கும், "ஆணவம், வஞ்சகம், வெறுப்பு, சூழ்ச்சி" இதுபோன்ற தீய குப்பைகளையும் அறியக்கூடும் அல்லவா!... அப்படி இருக்கையில், எவ்வாறு நம் வேண்டுதல்களும் கோரிக்கைகளும் நிறைவேறும்? எவ்வாறு நமக்கு தெய்வத்தின் அருளும் அனுக்கிரகமும் கிடைக்கும்? இது அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்று.
இதனையே நம் முன்னோர்கள் "மனமது செம்மையானால், மந்திரம் உரைக்க வேண்டாம்" என்றும் "தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி" என்றும் வணங்கி இருக்கிறார்கள். நம் மனமும் அதற்கு ஏற்ப தூய்மையாக இருந்தால், அங்கே தெய்வத்தின் இருப்பிடமாக இருக்கும். நம் முன்னோர்கள் தெய்வத்தின் சாட்சியாக, எந்த ஒரு செயலையும் செய்தார்கள். அதையே நாம் பேச்சு வழக்கில் "மனதை தொட்டு சொல்" என்று நம் மனசாட்சியின் படி கேட்கிறோம். அந்த மனசாட்சியே அந்த தெய்வத்தின் சாட்சியாகும். நம் மனசாட்சிக்கு விரோதமாக ஏதேனும் செய்தால், அந்த மனசாட்சியே இன்று இல்லையேல் என்றாவது நம் மனதை வாட்டி துன்புறுத்தும்.
ஆதலால் தெய்வத்திடம் வணங்கும் முன், நம் மனதை தூய்மைப்படுத்தி மனிதனாக மாறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக