இது மட்டுமா, இலவசங்கள், உணவு, நலத்திட்டங்கள் விநியோகங்கள், பொது விழாக்கள் என எதுவாக இருந்தாலும், கட்டுக்கடங்காத கூட்டம் கூடும் இடங்களில் சுயநலத்துடன் செயல்படுவதும், மற்றவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதும் தவறு. மேலும், கூட்டம் அதிகமாக இருப்பதை உணர்ந்தும், அங்கு செல்வதைத் தவிர்ப்பது அவசியம். கூட்டம் அதிகம் உள்ள இடத்தில் சேர்ந்து, கூட்ட நெரிசலை மேலும் அதிகரிப்பது, மற்றவர்களுக்கு மட்டுமின்றி உங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
இத்தகைய கூட்டங்களில், சிறு அசம்பாவிதமோ அல்லது கூட்ட நெரிசலோ பலரின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதற்கு யார் காரணம்? கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களா?, அனுமதி அளித்தவர்களா?, அல்லது பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியவர்களா?
உண்மையில், இந்தக் கூட்ட நெரிசலுக்குக் காரணம் ஒவ்வொரு தனிமனிதனும் அவரவர்களுடைய பொறுப்பின்மையும் தான், என்பதை நாம் உணர வேண்டும்.
ஒருவரை ஒருவர் தள்ளுவதும், கூட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதும், தங்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும். ஆகவே, இதுபோன்ற ஆபத்தான நிகழ்வுகளில் இருந்து விலகி இருப்பது அல்லது தவிர்ப்பது நல்லது.
சுயநலமற்ற சிந்தனையும், எச்சரிக்கையான அணுகுமுறையும், நம் ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக