இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

நவீன இரசாயன வேளாண்மையும் நுகர்வோர் உடலியல் சோர்வும் — ஓர் அலசல்

நவீன இரசாயன வேளாண்மையும் நுகர்வோர் உடலியல் சோர்வும் — ஓர் அலசல்
At ஜூலை 01, 2026
"உணவே மருந்து" என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது தமிழர்களின் உடலியல் வாழ்வியல். ஆனால், தற்கால சூழலில் தரமான உணவை உட்கொண்டாலும் உடலின் ஆற்றல் மட்டம் குறைந்து, சோர்வு நிலை நீடிப்பதை நுகர்வோர் உணர்கின்றனர். இதற்கான மூலக்காரணம் மனித உடலியலில் இல்லை, மாறாக உணவு உற்பத்தியாகும் மண்ணின் ஆரோக்கிய சிதைவில் உள்ளது என்பதை தற்கால வேளாண் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

வீரியமிக்க வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் தொடர் பயன்பாடு, மண்ணின் இயற்கை உயிர் சக்தியையும் (Soil Microbiome) அதன் நுண்ணுயிர் கட்டமைப்பையும் முற்றிலுமாக அழிக்கிறது.

இரசாயனங்கள் மண்ணின் கரிமப் பொருட்களை அழித்து, அதை வெறும் சக்கையாக மாற்றுகின்றன. உயிரோட்டமற்ற மண்ணில் வளரும் பயிர்கள், தாவர உள்வாங்குதல் திறனை (Nutrient Uptake) இழக்கின்றன. இதன் விளைவாக, தோற்றத்தில் பொலிவாக இருந்தாலும், உட்புற ஊட்டச்சத்துக்கள் அற்ற "வெறும் சக்கை" உணவுகளே சந்தைக்கு வருகின்றன.

முன்னோர்கள் கையாண்ட ஏர்கலப்பை மற்றும் நாட்டு மாடுகள் சார்ந்த சுழற்சி முறை வேளாண்மை வெறும் வழக்கம் அல்ல, அது ஒரு முழுமையான சுற்றுச்சூழல் அறிவியல். நாட்டு மாட்டோட சாணமும், கோமியமும் மண்ணின் "ஜீவநாடி" ஆகும். 

இவற்றில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் நைட்ரஜன் கூட்டுப்பொருட்கள், மண்ணிற்குத் தேவையான இயற்கை உயிர்வேதியியல் ஆற்றலைத் தடையின்றி வழங்குகின்றன.
தற்போதைய ரசாயனப் போக்கு நீடித்தால், மனித சமூகம் தங்களின் தினசரி அத்தியாவசிய ஊட்டச்சத்து தேவைகளுக்கு இயற்கை உணவை நம்பியிருக்க முடியாமல், செயற்கை வைட்டமின் மாத்திரைகளையும் (Supplements) மருந்துகளையும் தேடி அலைய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும்.

​இதற்கான ஒரே தீர்வு, இயற்கை வேளாண்மைக்குத் திரும்புதல், இரசாயன உத்திகளைக் குறைத்து, மீண்டும் முழுமையான இயற்கை விவசாய முறைகளை நோக்கி மாறுவது.

தற்போதைய ஆரோக்கியமான வாழ்விற்கும், அடுத்த தலைமுறையின் பாதுகாப்புக்கும் இயற்கை விவசாயப் பொருட்களையும் அதைச் சார்ந்த விவசாயிகளையும் சமூகம் முன்னின்று ஆதரிக்க வேண்டும்.

​(தரவு ஆதாரம்: https://youtube.com/shorts/ArC3_Zq8Zcw?feature=share)

Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக