இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

இராசிகளின் தன்மைகள்

இராசிகளின் தன்மைகள்
At ஏப்ரல் 07, 2024
இராசி என்றால், வான்வெளியில் பிரிக்கப்பட்ட பல்வேறு மண்டலங்களே இராசிகள். ஒவ்வொரு இராசி மண்டலங்களும் பல்வேறு விதமான தன்மைகளை வெளிப்படுத்தும்.

● இயக்கத்தின் அடிப்படையில் சரம், ஸ்திரம், உபயம் என்று ராசிகள் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
1. சர இராசிகள் : மேஷம், கடகம், துலாம், மகரம்

2. ஸ்திர இராசிகள் : ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்

3. உபய இராசிகள் : மிதுனம், கன்னி, தனுசு, மீனம்

● பாலினத் தன்மை அடிப்படையில் ஆண் இராசிகள் மற்றும் பெண் இராசிகள் என்று இராசிகள் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. அவற்றுள், ஆண் இராசிகளுக்கு பெண் சின்னங்களும், பெண் இராசிகளுக்கு ஆண் சின்னங்களும் இருப்பதை அறிய முடியும்.

1. ஆண் இராசிகள் : மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம்

2. பெண் இராசிகள் : ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்

● உயரத்தின் அடிப்படையில் குள்ள இராசிகள், நடுத்தர உயரம் உள்ள இராசிகள், உயரமான இராசிகள் என வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

1. குள்ள இராசிகள் : மேஷம், ரிஷபம், கும்பம்

2. நடுத்தர உயரம் கொண்ட இராசிகள் : மிதுனம், கடகம், தனுசு, மகரம், மீனம்

3. உயரமான இராசிகள் : சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

● நீர்மத்தின் அடிப்படையில் இராசிகள் நீர்ம இராசிகள் அல்லது நீர் இராசிகள், மிதமான நீர் இராசிகள், நீர்த்தன்மையற்ற இராசிகள் அல்லது வறண்ட இராசிகள்.

1. நீர் இராசிகள் : கடகம், விருச்சிகம், மீனம், மகரம்

2. மிதமான நீர் உடைய இராசிகள் : ரிஷபம், மிதுனம், கன்னி, கும்பம்

3. நீர் தன்மையற்ற அல்லது வறண்ட இராசிகள் : மேஷம், சிம்மம், தனுசு, துலாம்

● செயலின் அடிப்படையில் இராசிகளின் தன்மைகள் உபதேசிக்கும் இராசிகள், துணிச்சலுடன் போராடும் இராசிகள், பொருளாதார திறனுள்ள இராசிகள், உழைக்கும் இராசிகள் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

1. உபதேசம் செய்யும் தன்மையுடைய இராசிகள் : ரிஷபம், விருச்சிகம், மீனம்

2. போராடும் தன்மையுடைய இராசிகள் : மேஷம், சிம்மம், தனுசு

3. பொருளாதார திறனுள்ள இராசிகள் : மிதுனம், துலாம், கும்பம்

4. உழைக்கும் தன்மையுடைய இராசிகள் : கடகம், கன்னி, மகரம்

மேலும், தெரிந்து கொள்க சோதிடம் எனும் பேரருள்

Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக